கள்ளக் காதலனுடன் ஓடிப் போன மனைவி…. தந்திரமாக ஊருக்கு வரவழைத்து இரும்பு கம்பியால் போட்டுத் தள்ளிய கணவன் !!

Published : Jan 18, 2019, 09:29 AM ISTUpdated : Jan 18, 2019, 11:02 AM IST
கள்ளக் காதலனுடன் ஓடிப் போன மனைவி…. தந்திரமாக ஊருக்கு வரவழைத்து இரும்பு கம்பியால் போட்டுத் தள்ளிய கணவன் !!

சுருக்கம்

ஓர் ஆண்டுக்கு முன்பு கள்ளக் காதலனுடன் ஓடிப்போன மனைவியை தந்திரமாக ஊருக்கு வரவழைத்து இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம் தொட்டறையைச் சேர்ந்தவர் லதா. இவருக்கும் ராமநாதபுரம் மாவட்டம்  உத்திரகோசமங்கையை அடுத்த மரியபுரத்தைத் சேர்ந்தவர் மோசசுக்கம் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

மோசஸ் அபிராமம் அருகில் உள்ள தனியார் பள்ளியில் பணியாற்றுவதால் மோசஸ் குடும்பத்துடன் அபிராமத்தில் வசித்து வந்தார். லதா தொட்டறையில் வசிக்கும்போதே  வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த  கிருஷ்ணன் என்பவருடன் தொடர்பு இருந்து வந்துள்ளது.இந்தத் தொடர்பு திருமணத்துக்குப் பின்னும் தொடர்ந்தது.

இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. இதனிடையே  லதா கடந்த ஆண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு கள்ளக் காதலனுடன் சென்றுவிட்டார். இதையடுத்து கிருஷ்ணன் தனது மனைவியை காணவில்லை என போலீசில் புகார் அளித்தார்.

லதா அபிராமத்தில் இருந்தபோது பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பத்திருந்தார். இதையடுத்து லதாவை போனில் தொடர்பு கொண்ட மோசஸ், உனக்கு பாஸ்போர்ட் வந்திருக்கிறது, அதற்கான போலீஸ் விசாரணை உள்ளது. நீ இங்கு வந்து கையெழுத்து போட்டு பாஸ்போர்ட்டை பெற்றுக் கொள்ளலாம் என கூறியுள்ளார்.

இதை நம்பி லதா நேற்று அபிராமம் வந்துள்ளார். அவர் அகத்தாரிருப்பு கூட்டுரோடில் பேருந்தில் வந்து இறங்கினார். அப்போது அங்கு காத்திருந்த மோசஸ், லதாவை இரும்புக் கம்பியால் தலையில் அடித்தார்.

இதில் லதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து போலீசார் மோசசை கைது செய்தனர்.

PREV
click me!

Recommended Stories

அங்கிள் இப்படியெல்லாம் செய்யாதீங்க ரொம்ப தப்பு.. கதறிய 12 வயது சிறுமி.. விடாத கொடூரன்.!
கண் விழித்து பார்த்த மருத்துவ மாணவி.! சிதறி கிடந்த ஆடைகள்.! ஒரு வேகத்தில் அப்படி செஞ்சுட்டேன்.! டாக்டர் கதறல்