கணவன் கொலை.. செப்டிக் டேங்கில் உடல்.. 9 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய மனைவி.. நடந்தது என்ன?

By vinoth kumar  |  First Published Sep 12, 2023, 1:05 PM IST

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கம்பன் தெருவில் உள்ள சீராளன் என்பவர் வீட்டின் செப்டிக் டேங்கில் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு ஆணின் சட்டை மற்றும் மனித எலும்பு கூடு உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்ட கணவனை கொலை செய்துவிட்டு உடலை செப்டிக் டேங்கில் வீசிய மனைவி 9 ஆண்டுகளுக்குப் பின் கைது செய்யப்பட்டார். 

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கம்பன் தெருவில் உள்ள சீராளன் என்பவர் வீட்டின் செப்டிக் டேங்கில் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு ஆணின் சட்டை மற்றும் மனித எலும்பு கூடு உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- ஆஹா ஸ்பெஷல் மசாஜா.. ஆசை ஆசையாய் சென்ற சென்னை ஐடி ஊழியர்.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?

அப்போது  இந்த வீட்டில் 9 ஆண்டுகளுக்கு முன்பு ஆம்னி பேருந்து டிரைவரான பாண்டியன், அவரது மனைவி, மகள், மகனுடன் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர். அப்போது பாண்டியன் குடிபோதையில் வந்து மனைவி சுகந்தியிடம் தகராறில் ஈடுபட்டு அடித்து உதைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுகந்தி கணவரை தள்ளிய போது  தலை சுவற்றில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதையும் படிங்க;-  மசாஜ் சென்டரில் மஜாவாக நடந்த விபசாரம்.! அரை குறை ஆடைகளுடன் சிக்கிய பெண்கள்.! கல்லா கட்டிய பிசினஸ்க்கு ஆப்பு.!

இதனையடுத்து பாண்டியனின் உடலை சுகந்தி யாருக்கும் தெரியாமல் செப்டிக் டேங்கில் போட்டுள்ளார். பின்னர், கணவர் வெளியூர் சென்று விட்டதாக கூறி குடும்பத்தினர் வீட்டை காலி செய்து சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து  9 ஆண்டுகளுக்கு பிறகு சுகந்தியை கைது செய்த போலீசார் தேவகோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். 

click me!