சென்னை தியாகராய நகரில் உள்ள லெஜண்ட் சரவணா ஸ்டோரில் பணியாற்றி வந்த பெண் ஊழியர் ஒருவர் அங்கிருந்த ஆலா பாட்டிலை குடித்து தற்கொலை முயன்றுள்ளார். இதன் காரணமாக சரவணா ஸ்டோரில் பரபரப்பு ஏற்பட்டது.
பெண் ஊழியர் தற்கொலை முயற்சி
சென்னையில் முக்கிய வர்த்தக இடமாக தியாகராய நகர் பகுதியில் பல மாடிகளை கொண்ட துணிக்கடைகள், பாத்திரக்கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு நாள் தோறும் லட்சக்கணக்கான பொதுமக்கள் பொருட்களை வாங்க வருவார்கள். அதே நேரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்றால் கேட்கவே வேண்டாம். பாண்டி பஜார், ரங்கநாதன் தெரு உள்ளிட்ட இடங்களில் திருவிழா போல் காட்சி அளிக்கும்.
இந்தநிலையில் சென்னைய தியாகராயநகரில் உள்ள லெஜெண்ட் சரவணா ஸ்டோரில் பணிபுரியும் பெண் ஊழியர் ஆலா குடித்து தற்கொலை முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தியாகராயநகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள லெஜன்ட் சரவணா ஸ்டோரில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பானுப்பிரியா(25) என்பவர் கடந்த ஆறு ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார்.
தற்கொலை முயற்சிக்கு காரணம் என்ன.?
இந்த நிலையில் லெஜன்ட் சரவணா ஸ்டோர் மேலாளர் திரவியம் மற்றும் ஊழியர் லிங்கம் என்பவர்கள் பானுப்பிரியாவை நேற்று மாலை அனைவரும் முன்னிலையில் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த பானுப்பிரியா ஸ்டோரியில் இருந்த ஆலா வை எடுத்துக் குடித்து மயக்கம் அடைந்துள்ளார்.
இதனால் அருகில் இருந்த பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பான நிலை காணப்பட்டது. இதனையடுத்து பானுப்பிரியாவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பாண்டி பஜார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்
ஒரு கிலோ இஞ்சி விலை 260 ரூபாய்.! தக்காளி விலை என்ன தெரியுமா.? இதோ விலைப்பட்டியல்