எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கள்ளக்காதலியுடன் கணவர் உல்லாசம்.. இரண்டு மகன்களுடன் மனைவி செய்த பகீர் காரியம்.!

Published : Mar 21, 2022, 06:52 AM ISTUpdated : Mar 21, 2022, 06:55 AM IST
எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கள்ளக்காதலியுடன் கணவர் உல்லாசம்.. இரண்டு மகன்களுடன் மனைவி செய்த பகீர் காரியம்.!

சுருக்கம்

இவருக்கு தனது நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சீதா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் நாளடைவில் மனைவிக்கு தெரியவந்தது. 

கணவரின் கள்ளக்காதல் விவகாரத்தில் இரண்டு மகன்களுடன் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் கணவர் மற்றும் கள்ளக்காதலியை கைது செய்துள்ளனர்.

கள்ளக்காதல்

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள கணவாய்புதூர் கே.மோரூர் லேண்ட் காலனி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன்(32). இவரது மனைவி மரகதம். இவர் தர்மபுரி பாலக்காடு பகுதியை சேர்ந்தவர். இந்த தம்பதிக்கு செல்வகணபதி, கோகுலக்கண்ணன் என 2 மகன்கள் இருந்தனர். பிரபாகரனுக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. அவர் பழைய பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி அதனை உருக்கி வெளியூருக்கு பிளாஸ்டிக் பைகள், பொருட்கள் தயாரிக்கும் கம்பெனிகளுக்கு விற்பனை செய்து வருகிறார்.

இவருக்கு தனது நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சீதா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் நாளடைவில் மனைவிக்கு தெரியவந்தது. இதனால், கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.  இருப்பினும் பிரபாகரன் எவ்வளவு சொல்லியும் கள்ளத்தொடர்பை கைவிடவில்லை.

 தற்கொலைக்கு தூண்டல்

இதனால், மனமுடைந்த மரகதம் கடந்த பிப்ரவரி மாதம் தனது 2 மகன்களுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து பிரபாகரன், அவரது கள்ளக்காதலி சீதா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

PREV
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி