பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த மனைவி கொலை.. என்ன காரணம் தெரியுமா? கணவர் பகீர் தகவல்.!

Published : Mar 30, 2022, 10:01 AM IST
பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த மனைவி கொலை.. என்ன காரணம் தெரியுமா? கணவர் பகீர் தகவல்.!

சுருக்கம்

வேலூரில் உள்ள தனியார் ஐ.டி.ஐயில் படித்த குடியாத்தம் தரணம்பேட்டையை சேர்ந்த சுப்ரஜாவை (24) காதலித்து வந்தார்.  இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி, திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வந்தனர். சுப்ரஜா தனது அத்தை தனலட்சுமிக்கு அடிக்கடி போன் செய்து பேசுவது வழக்கம்.

கே.வி.குப்பம் அருகே கல்லூரிக்காதலியை திருமணம் செய்து கொண்ட இளைஞர் ஒருவர் தனது மனைவி கொலை செய்து காட்டில் புதைத்ததாக 3 மாதம் கழித்து கைது செய்யப்பட்டுள்ளார். 

காதல் திருமணம்

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே கே.வி.குப்பம் வடுகன்தாங்கல் பகுதியை சேர்ந்த விநாயகம்(24). கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் தன்னுடன் வேலூரில் உள்ள தனியார் ஐ.டி.ஐயில் படித்த குடியாத்தம் தரணம்பேட்டையை சேர்ந்த சுப்ரஜாவை (24) காதலித்து வந்தார்.  இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி, திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வந்தனர். சுப்ரஜா தனது அத்தை தனலட்சுமிக்கு அடிக்கடி போன் செய்து பேசுவது வழக்கம்.

மனைவி கொலை

இந்நிலையில், விநாயகத்துக்கு வேறு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனை தட்டி கேட்டதால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனிடையே, கடந்த ஜனவரி 19ம் தேதி இருவருக்கும் தகராறு ஏற்பட்ட பின்பு, சுப்ரஜா திடீரென காணவில்லை. கடந்த 2 மாதங்களாக சுப்ரஜாவிடம் இருந்து போன் வராததால் சந்தேகம் அடைந்த அத்தை தனலட்சுமி, அவரைத் தொடர்பு கொள்ள முயற்சித்து பதில் கிடைக்கவில்லை.

கணவர் கைது

இதுகுறித்து விநாயகத்திடம் கேட்டபோது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த தனலட்சுமி கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் குறித்து புகார் அளித்தார். இதையடுத்து, விநாயகத்திடம் போலீசார் பாணியில் விசாரணை நடத்தினர். அப்போது, தம்பி விஜய் (21), உறவினரின் 18 வயது மகனுடன் சேர்ந்து, சர்க்கார் தோப்பில் சுப்ரஜாவை உயிருடன் புதைத்து கொலை செய்ததாக  தெரிவித்தார். இதையடுத்து, சுப்ரஜாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக 3 பேரையும் கைது செய்த போலீசார் காட்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 18 வயது சிறுவன் செங்கல்பட்டில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவி உயிருடன் புதைத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க;- நினைக்கும் போதெல்லாம் கண்டவனுடன் உல்லாசம்.. தடையாக இருந்த குழந்தையை கொடூரமாக கொன்ற காமவெறி பிடித்த தாய்.!

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!