தூத்துக்குடி மாவட்டத்தில் சொத்து தகராறில் தங்கை, தங்கையின் கணவர் மீது மிளகாய் பொடியை தூவி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராம்குமார், மாரியம்மாள் தம்பதி. ராம்குமார் அப்பகுதியில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால் அண்மையில் தான் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கத் தொடங்கியுள்ளனர்.
பட்டியலின மக்கள் பயன்படுத்தும் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த சமூக விரோதிகள்
இந்நிலையில் மாரியம்மாளுக்கும் அவரது அண்ணன் முருகேசனுக்கும் ஏற்கனவே சொத்து தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக மொத்த சொத்தையும் மாரியம்மாள் தன் பெயருக்கு மாற்றி எழுதிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முருகேசனும், அவரது மகன் மகேசும் இணைந்து முருகேசனையும், மாரியம்மாளையும் கொலை செய்ய முடிவு செய்தனர்.
துறைகளின் செயல்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் திடீர் ஆய்வு
இதனைத் தொடர்ந்து நேற்று இரவு 8 மணியளவில் ராம்குமார் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். அவரை வழிமறித்து கண்களில் மிளகாய் பொடியைத் தூவி முருகேசனும், மகேசும் இணைந்து சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் ராம்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பின்னா் ராம்குமாரின் வீட்டிற்கு சென்று மாரியம்மாளையும் வெட்டி கொலை செய்தனர்.
கொலை குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் இரு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலையில் ஈடுபட்ட இருவரையும் காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.