ஏ.டி.எம் மையங்களில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை அறிந்து கொள்ள பிரத்யேக செயலி.. போலீசை அதிரவைத்த கொள்ளையன்.

By Ezhilarasan BabuFirst Published Jul 8, 2021, 1:41 PM IST
Highlights

ஏ.டி.எம் இயந்திரங்களில் கொள்ளையடிப்பது குறித்தான முழு பயிற்சியை ஹரியானாவில் மேற்கொண்டு கொள்ளையில் ஈடுபட்டதும், போலீசாரிடம் சிக்கினால் விசாரணையின்போது எப்படி பதிலளிக்க வேண்டும் என்ற பயிற்சியையும் ஹரியானா கும்பல் மேற்கொண்டிருப்பதும் சவுகத் அலி-யிடம் நடத்திய விசாரணையில்  தெரியவந்தது.

ஏ.டி.எம் மையங்களில் எவ்வளவு பணம் உள்ளது என கண்டறிய பிரத்யேக செயலியை ஹரியானா கும்பல் பயன்படுத்தி இருப்பது அக்கொள்ளைகூட்ட தலைவனிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை உட்பட தமிழகம் முழுவதிலும் எஸ்.பி.ஐ டெபாசிட் ஏ.டி.எம்-களை குறிவைத்து ஹரியானா கும்பல் கைவரிசை காட்டி லட்சக்கணக்கான ரூபாயை கொள்ளை அடித்துச் சென்றனர். இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த தனிப்படை போலீசார் ஹரியானாவிற்கு விரைந்து கொள்ளையில் ஈடுபட்ட அமீர் அர்ஷ், வீரேந்தர் ராவத், நஜீப் ஹுசைன், மற்றும் கொள்ளை கூட்டத்தின் தலைவன்களில் ஒருவனான சவுக்கத் அலி ஆகிய 4 பேரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்த சிறையில் அடைத்தனர். சமீபத்தில் கைது செய்யப்பட்ட தலைவனான சவுக்கத் அலி-யை பெரியமேடு போலீசார் நேற்று 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். தற்போது வரை நடைபெற்றுள்ள விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது. 

குறிப்பாக பெரியமேடு எஸ்.பி.ஐ ஏ.டி.எம்-ல் மட்டுமே 190 முறை ஸ்வைப் செய்து 16 லட்சம் ரூபாயை ஹரியானா கும்பல் கொள்ளையடித்து சென்றது. 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் சவுகத் அலியும் கூட்டாளியும், 17 மற்றும் 18 ஆம் தேதி வேறு இரு நபர்கள் என பிரித்து பிரித்து பெரியமேடு ஏ.டி.எம்களில் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் கொள்ளை அடிப்பதற்காக செல்லக்கூடிய ஏ.டி.எம் மையங்களில் பணம் இருப்பு எவ்வளவு உள்ளது என்பதை அறிவதற்காக அவர்கள் அதற்கான பிரத்யேக செயலி ஒன்றை உருவாக்கி, செல்போனில் பயன்படுத்தியதும் தெரியவந்தது. அந்த செயலியை பயன்படுத்தியே இதுவரை ஹரியானா கும்பல் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் எஸ்.பி.ஐ ஏ.டி.எம் இயந்திரங்களில் கொள்ளையடிப்பது குறித்தான முழு பயிற்சியை ஹரியானாவில் மேற்கொண்டு கொள்ளையில் ஈடுபட்டதும், போலீசாரிடம் சிக்கினால் விசாரணையின்போது எப்படி பதிலளிக்க வேண்டும் என்ற பயிற்சியையும் ஹரியானா கும்பல் மேற்கொண்டிருப்பதும் சவுகத் அலி-யிடம் நடத்திய விசாரணையில்  தெரியவந்தது. 

சவுகத் அலியிடம் இதுவரை போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தொடர்ந்து மழுப்பலாகவே பதிலளித்து வருவதால், வேறு பல யுக்திகளைக் கையாள போலீசார் முடிவு செய்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஒரு கொள்ளை கும்பலின் தலைவனாக சவுக்கத் அலி செயல்பட்டுள்ளான் என்பதால் எஸ்.பி.ஐ ஏ.டி.எம்-ஐ தேர்ந்தெடுத்து கொள்ளையில் ஈடுபட்டது எப்படி? என நேரில் அழைத்து சென்று விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் கொள்ளையர்கள் பயன்படுத்திய செயலியின் பெயர் என்ன? கொள்ளை அடிக்கப்பட்ட பணம் குறித்த விவரங்களை சவுக்கத் அலியிடம் விசாரிக்க பெரியமேடு போலீசார் முடிவு செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் குறிப்பிட்ட ஓ.ஏ.ஐ என்ற நிறுவனம் தயாரித்த ஏ.டி.எம் டெபாசிட் இயந்திரங்களில் இவ்வாறு ஒரு பலவீனம் உள்ளது என்பதை கொள்ளை கும்பல் அறிந்தது எப்படி? என்பது குறித்தும் போலீசார் சவுக்கத் அலி-யிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
 

click me!