சாதி மறுப்பு திருமணம் செய்த மகள்.. ரத்த வெள்ளத்தில் துடிக்க துடிக்க தலையை துண்டித்து செல்ஃபி எடுத்த தாய், மகன்

Published : Dec 07, 2021, 09:00 AM IST
சாதி மறுப்பு திருமணம் செய்த மகள்.. ரத்த வெள்ளத்தில் துடிக்க துடிக்க தலையை துண்டித்து செல்ஃபி எடுத்த தாய், மகன்

சுருக்கம்

தேனிநீர் போட்டுக்கொண்டிருந்த  கீர்த்தியின் கால்களை பிடித்து கீழே தள்ளிய தாய் ஷோபா, அவரது கால்களை பிடித்துக் கொண்டார். அந்த நேரத்தில் தம்பி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அக்கா கீர்த்தியின் கழுத்தை கரகரவென ரத்த வெள்ளத்தில் துடிக்க துடிக்க அறுத்து கொன்றார். 

எதிர்ப்பை மீறி சாதி மறுப்பு திருமணம் செய்த மகளை, அவரது தாயும், மகனும் சேர்ந்து கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு எந்த ஒரு அச்சமும் இல்லாமல் தலையுடன் செல்ஃபி எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் வைஜாபூர் தாலுகா கோய்கான் கிராமத்தை சேர்ந்தவர் அஜய்(23). இவர் அதே பகுதியைச் சேர்ந்த கீரத்தி (19) என்ற இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் வேறு சாதி என்பதால் பெண்ணின் குடும்பத்தார் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, வேறு வழியில்லாமல் இருவரும் கடந்த ஜூன் மாதம் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். எவ்வளவு சொல்லியும் கேட்காமல் திருமணம் செய்து கொண்ட மகள் மீது தாய் கடும் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார். வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞருடன் பெண் ஓடிச்சென்றதாக அக்கம் பக்கத்தினரும், உறவினர்களும் ஏளனமாக பேசி வந்துள்ளனர். 

இதனிடையே, வெளியூரில் தங்கியிருந்த தம்பதி தங்கள் மீதான வெறுப்பு குறைந்திருக்கும் என்கிற நம்பிக்கையில் ஊர் திரும்பினர். இந்த தகவல் கீர்த்தியின் தாய்க்கு தெரியவந்தது. கீர்த்தியின் தம்பி சங்கேத் மோடே(19) மற்றும் அவரது தாய் ஷோபா எஸ்.மோடே(40) ஆகிய இருவரும், கீர்த்தி வீட்டிற்கு வந்துள்ளனர். தாய் மற்றும் தம்பியை கண்டதும் ஆனந்த கண்ணீரில் கீர்த்தி மகிழ்ச்சி அடைந்தார். 

வீட்டுக்கு வந்த தாயாருக்கும், தம்பிக்கும் தேனிநீர் மற்றும் ஸ்நாக்ஸ் எடுத்து வருவதாக சமையலறைக்குள் சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து தாயும், தம்பியும் உள்ளே சென்றுள்ளனர்.தேனிநீர் போட்டுக்கொண்டிருந்த  கீர்த்தியின் கால்களை பிடித்து கீழே தள்ளிய தாய் ஷோபா, அவரது கால்களை பிடித்துக் கொண்டார். அந்த நேரத்தில் தம்பி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அக்கா கீர்த்தியின் கழுத்தை கரகரவென ரத்த வெள்ளத்தில் துடிக்க துடிக்க அறுத்து கொன்றார். 

ஆனாலும், ஆத்திரம் அடைக்காத நிலையில் அக்கா தலையை தனியாக எடுத்தார். துண்டான கீர்த்தியின் தலையை வீட்டுக்கு வெளியே எடுத்து வந்து அனைவரிடமும் காட்டி உள்ளனர். மகளின் தலையை கையில் ஏந்தியபடி தாயும், மகனும் செல்ஃபி எடுத்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட மகளை கொலை செய்துவிட்டதாக தாயும், மகனும் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கீர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!