வேறொருவருடன் பழகிய பாபு.. ஆத்திரத்தால் கொலையில் முடிந்த ஓரினச்சேர்க்கை காதல்.. வெளியான அதிர்ச்சி தகவல்.!

Published : Apr 09, 2022, 11:10 AM IST
வேறொருவருடன் பழகிய பாபு.. ஆத்திரத்தால் கொலையில் முடிந்த ஓரினச்சேர்க்கை காதல்.. வெளியான அதிர்ச்சி தகவல்.!

சுருக்கம்

தற்போது கல்லுாரி திறக்கப்பட்டதால் சென்னையிலிருந்து செய்யாறு வந்த பாபு கல்லுாரி படிப்பை தொடர்ந்தார். இந்நிலையில், பாபுவை மொபைல் போனில் தொடர்பு கொண்ட பைசல் தான் செய்யாறு வந்துள்ளதாகவும் கோனேரியான் குளக்கரை அருகே வரும்படியும் அழைத்துள்ளார். அங்கு சென்ற பாபுவிடம், ஏன் என்னுடன் சேர்ந்து வியாபாரம் செய்ய மறுக்கிறாய் எனக்கேட்டு பைசல் தகராறில் ஈடுபட்டுள்ளார். 

ஓரினச்சேர்க்கை காதலால் கல்லூரி மாணவனை சரமாரியாக வெட்டிக் கொன்ற சென்னையைச் சேர்ந்த கூலிப்படையினர்  4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த திருவத்திபுரத்தைச் சேர்ந்தவர் பாபு (20). செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். அவருக்கு சென்னை செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த பைசல் என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒன்றாக சேர்ந்து போர்வை வியாபாரம் செய்யும் அளவுக்கு நட்பு ஏற்பட்டது. 

கொலை

தற்போது கல்லுாரி திறக்கப்பட்டதால் சென்னையிலிருந்து செய்யாறு வந்த பாபு கல்லுாரி படிப்பை தொடர்ந்தார். இந்நிலையில், பாபுவை மொபைல் போனில் தொடர்பு கொண்ட பைசல் தான் செய்யாறு வந்துள்ளதாகவும் கோனேரியான் குளக்கரை அருகே வரும்படியும் அழைத்துள்ளார். அங்கு சென்ற பாபுவிடம், ஏன் என்னுடன் சேர்ந்து வியாபாரம் செய்ய மறுக்கிறாய் எனக்கேட்டு பைசல் தகராறில் ஈடுபட்டுள்ளார். 

அப்போது, ஆத்திரமடைந்த பைசல், அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து பாபுவை  தலை, கை, கால்களில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர். பாபுவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்தபோது 4 பேரும் தப்பினர். இதனையடுத்து, பாபுவை மீட்டு செய்யாறு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பைசல் மற்றும் அவரது கூலிப்படை கூட்டாளிகள் பாலாஜி, பிரபு, ஜேசுராஜ் என மொத்தம் 4  பேரை கைது செய்தனர். 

ஓரினசேர்க்கை

அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பைசல்- பாபு இருவரும் காதலன் காதலியாக ஓரினசேர்க்கையில் ஈடுபட்டதும், வேறொருவருடன் பாபு பழகியதை தாங்க முடியாத பைசல், கொலை செய்ய முயன்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இரண்டு குழந்தைகளின் தாயான 26 வயது அமிர்தா.. 32 வயது சித்தேஷ்.. 24 மணி நேரத்தில் சிக்கியது எப்படி?
கதறிய மாமியார்.. விடாத மருமகன்.. நடந்தது என்ன? பரபரப்பு தகவல்