ஏய் கிளம்பு.. இது என் ஊரு.. போலீசை நடு ரோட்டில் வச்சு செய்த ரவுடி.. அதிரவைக்கும் காட்சி.

By Ezhilarasan BabuFirst Published Jul 23, 2021, 4:58 PM IST
Highlights

இந்த சம்பவத்தை அடுத்து அந்த கட்டிடத்தின் உரிமையாளர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார், பிறகு நொளம்பூர் காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் சம்பவ இடத்திற்கு வந்தது டேனியிடம் விசாரணை நடத்தினார்,

சென்னை நொளம்பூர் பகுதியில் கட்டிட உரிமையாளரிடம் மாமுல் கேட்டு தொல்லை கொடுத்த நபரை விசாரிக்கச் சென்ற போலீஸ்க்கு அந்த நபர் தரக்குறைவாகப்  பேசி மிரட்டல் விடுக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. போலீசையே மிரட்டும் அந்த நபருக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என சமூக வலைதளத்தில் பலரும் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ரவுடிகளின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குடியிருப்பு பகுதிகளில் அப்பாவி மக்களை மிரட்டி பணம் பறிப்பது, வெளியூர்களில் இருந்து வந்து சென்னையில் வீடு கட்டுவோரிடம் (கட்டிங் போடுவது) மாமூல் வசூலிப்பது போன்ற அட்ராசிட்டிகளில் லோக்கல் ரவுடிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில் சென்னை நொளம்பூர் 4வது பிரதான சாலையில் அரசு அதிகாரி ஒருவர் தனக்கு சொந்தமான இடத்தில் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறார் அதற்கான ஜல்லி, மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை வீட்டின் வாசலில் கொட்டி வைத்துள்ளார். இந்நிலையில் அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சத்யா  என்பவரின் மகன் டேனி என்கிற லோக்கல் ரவுடி, கட்டிட உரிமையாளரிடம் இந்த ஏரியா முழுவதும் எனது கண்ட்ரோல், எனக்குத் தெரியாமல் இங்கே வீடோ, இல்ல பில்டிங்கோ கட்ட முடியாது, தனக்கு கட்டிங்  கொடுத்துவிட்டு உங்கள் வேலையை தொடலாம் என கட்டிட உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.  தான் புரட்சி பாரதம் கட்சியைச் சேர்ந்தவன் எனவும் தனக்கு 1 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என மிரட்டியதுடன் தட்டிக் கேட்ட காவலாளியை டேனி சரமாரியாக தாக்கினார்.

"

இந்த சம்பவத்தை அடுத்து அந்த கட்டிடத்தின் உரிமையாளர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார், பிறகு நொளம்பூர் காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் சம்பவ இடத்திற்கு வந்தது டேனியிடம் விசாரணை நடத்தினார், அதையெல்லாம் சற்றும் பொருட்படுத்தாதவரை போல, அந்த ஆய்வாளரை ரவுடி டேனி மிரட்ட தொடங்கினார்.  இது எங்க ஏரியா.. எங்கியோ இருந்து வந்து எங்க கிட்ட பேசுறியா. ஒழுங்கா போயிடு.. அப்புறம் வேறமாதிரி ஆயிடும் என அவர் மிரட்டினார். மேலும்  நான் நொளம்பூர்காரன் பாத்துக்கோ என போலீசை மிரட்டியதுடன், அங்கிருந்து தனது நண்பரின் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றார். இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவுகிறது. போலீசையே மிரட்டும் அந்த நபர் மீது உடனே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 
 

click me!