வகுப்பறையில் முனகல் சத்தம்.. எட்டிப்பார்த்த மாணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

By vinoth kumar  |  First Published Dec 19, 2022, 10:21 AM IST

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மசூலிப்பட்டணம் சிலகுலபொடி பகுதியில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். 


பள்ளி வகுப்பறையில் ஆசிரியையுடன் தலைமை ஆசிரியர் உல்லாசமாக இருந்த வீடியோ வைரலான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மசூலிப்பட்டணம் சிலகுலபொடி பகுதியில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். அந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக ஆனந்த்பிரசாத் (48) என்பவர் பணியாற்றி வருகிறார். இவருடன் ஒப்பந்த ஆசிரியை ஒருவரும் பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி விட்டது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம்.. மனைவி கண்முன்னே பிரபல ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை..!

பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் என்பதால் அடிக்கடி இருவரும் சந்திக்கும் நிகழ்வு ஏற்பட்டது. இதனால், இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. பள்ளி நேரம் முடிந்ததும் ஆசிரியையை தனது அறைக்கு அழைத்துச்சென்று ஆனந்த்பிரசாத் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதை அந்த பள்ளியை சேர்ந்த நேரில் மாணவர்கள் பார்த்துள்ளனர். வழக்கம் போல தனது அறைக்கு ஆசிரியையை அழைத்து சென்று, தலைமை ஆசிரியர் ஆனந்த்பிரசாத் உல்லாசமாக இருந்துள்ளார். இதனை மாணவன் ஒருவன் அவர்களுக்கு தெரியாமல் வீடியோ எடுத்துள்ளார்.  மாணவன் வீடியோ எடுப்பதை தலைமை ஆசிரியரும், ஆசிரியையும் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இந்த வீடியோவை மாணவன் வைரலாக்கியுள்ளார். 

இதனையடுத்து, அந்த மாணவனை தலைமை ஆசிரியர் அழைத்து அவரை கடுமையாக தாக்கியுள்ளார். இது தொடர்பாக மாணவன் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த வீடியோ வைரலானதை அடுத்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கல்விதுறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து தலைமை ஆசிரியர் ஆனந்த்பிரசாத்தை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர் தலைமை ஆசிரியர் பணியில் இருந்து சஸ்பெண்ட்  செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க;- நீ வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணாலும் நான் கூப்பிடும் போது வரணும்! உல்லாச வீடியோவை காட்டி மிரட்டிய காதலன் தற்கொலை

click me!