அட கடவுளே.. காதல் மனைவியை கழற்றிவிட்டு கல்லூரி மாணவியுடன் ஓட்டம் பிடித்த ஆசிரியர்..!

Published : Jan 23, 2022, 10:09 AM IST
அட கடவுளே.. காதல் மனைவியை கழற்றிவிட்டு கல்லூரி மாணவியுடன் ஓட்டம் பிடித்த ஆசிரியர்..!

சுருக்கம்

புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டு கலிதீர்த்தாள்குப்பம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (42). அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஒப்பந்த ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவருக்கும், மகேஸ்வரி (38) என்பவருக்கும் கடந்த 2006-ம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. 

காதல் திருமணம் செய்த மனைவியை விட்டு  கல்லூரி மாணவியுடன் ஆசிரியர் ஓட்டம் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டு கலிதீர்த்தாள்குப்பம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (42). அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஒப்பந்த ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவருக்கும், மகேஸ்வரி (38) என்பவருக்கும் கடந்த 2006-ம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது மகேஸ்வரிக்கு அவரது குடும்பத்தினர் 25 பவுன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் வரதட்சணை வழங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் செந்தில்குமாரின் குடும்பத்தினர் 50 பவுன் நகை, கார் ஆகியவற்றை கூடுதல் வரதட்சணை கேட்டு மகேஸ்வரியை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். அப்படி வரதட்சணை கொடுக்கவில்லை என்றால் மகனுக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைப்பதாகவும் அவர்கள் மிரட்டியுள்ளனர். 

.இதையடுத்து செந்தில்குமார், மகேஸ்வரி இருவரும் தனியாக குடும்பம் நடத்தி வந்தனர். இவர்களுக்கு 2018-ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையை பராமரிக்க உதவியாக செந்தில்குமார், தன்னிடம் படித்த முன்னாள் மாணவி ஒருவரை வேலைக்காக சேர்த்தார். அந்த பெண்ணுடன் செந்தில்குமாருக்கு நாளடைவில் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. 

இந்த விவகாரம் நாளடைவில் மனைவிக்கு தெரியவந்ததையடுத்து அந்த பெண்ணை வேலைக்கு வரவேண்டாம் என்று கூறிவிட்டார். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற செந்தில்குமார், அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதுபற்றி அவர்கள் வீட்டில் வேலை செய்த பெண் வீட்டிற்கு சென்று விசாரித்தபோது, அவரும் கடந்த சில நாட்களாக காணவில்லை என்பது தெரியவந்தது. இதுபற்றி விசாரித்தபோது, செந்தில்குமாரும், அந்த பெண்ணும் வீட்டைவிட்டு வெளியேறி ரகசிய திருமணம் செய்துகொண்டது மகேஸ்வரிக்கு தெரியவந்தது.  இதுதொடர்பாக தனது மாமனார், மாமியாரிடம் கேட்டபோது, அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, மகேஸ்வரி, வில்லியனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, செந்தில்குமார் மற்றும் அவரது தந்தை நாராயணன், தாய் வத்திஸ்கா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!