
திருமணம் செய்து கொள்ள மறுத்த கள்ளக்காதலியை கள்ளக்காதலன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது.
செய்தித்தாள்களை திறந்தாலே கள்ளக்காதல் அதனால் ஏற்படும் கொலைகளே அதிக அளவில் உள்ளது. பெரியவர்களின் வற்புறுத்தலின் காரணமாக திருமணம் செய்து கொள்ளும் சிலர், அதன்பிறகு கணவனுக்கு தெரியாமல் காதலுடன் காதல் விவகாரங்களை அரங்கேற்றுகின்றனர். சமீபகாலமாக காதல் விவகாரங்களும் திருமணத்திற்கு புறம்பான விவகாரங்களும் வெளிச்சத்துக்கு வந்தவண்ணம் உள்ளன. கணவனுக்குத் தெரியாமல் மனைவியும், மனைவிக்குத் தெரியாமல் கணவனும் கள்ளக்காதலில் ஈடுபடும் சம்பவங்கள் அடுத்தடுத்து வெளிச்சத்திற்கு வருகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் திருமணம் என்ற புனித பந்தத்தை சமூகத்தில் கேலிக்கூத்தாக்குகிறது.
இப்படிப்பட்ட உறவுகளால் அவர்களின் ஒட்டுமொத்த குடும்பமும் அவமானத்தையும், தலைகுனிவையும் சந்திக்க நேரிடுகிறது. இப்படிப்பட்ட ஒரு சம்பவம் ராஜஸ்தானில் அரங்கேறியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பாலி ஜில்லாவை சேர்ந்தவர் சாகன் லால் பஞ்சாரா (30) என்பவருக்கும் அவரது காதலிக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பஞ்சாராவுக்கும் அதே ஊரைச் சேர்ந்த திருமணமான மம்தா (23) என்ற பெண்ணுக்கும் இடையே திருமணத்துக்கு புறம்பான உறவு ஏற்பட்டது. இவர்களுக்கு இடையே உறவு இருப்பது அறிந்த அவரது மனைவி பஞ்சாராவுடன் சண்டையிட்டுக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இதனைத் தொடர்ந்து மம்தாவுக்கு பஞ்சாராவுக்கும் இடையே கள்ளக்காதல் 5 வருடங்களாக நீடித்தது. ஒரு கட்டத்தில் சாகன் பஞ்சார, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கள்ளக் காதலி மம்தாவிடம் கேட்டார். ஆனால் மம்தா அதை ஏற்க மறுத்தார், இதனால் ஆத்திரமடைந்த பஞ்சாரா மம்தாவுடன் ஏற்பட்ட காதலால்தான் உயிருக்கு உயிராய் நேசித்த காதல் மனைவு பிரிந்து சென்றுவிட்டார் என எண்ணி ஆத்திரமடைந்தார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மம்தாவின் வீட்டுக்குள் நுழைந்த பஞ்சாரா, அவரது குடும்பத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார், ஒரு கட்டத்தில் மம்தா மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். அதில் மம்தா ரத்தவெள்ளத்தில் சரிந்தார்.
அதன்பிறகு பஞ்சாரா தன்னைத்தானே சுட்டுக் கொண்டார், இதனையடுத்து அவர்கள் இருவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அதில் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை மம்தா உயிரிழந்தார். சாகன் பஞ்சாரா சனிக்கிழமை உயிரிழந்தார். திருமணம் செய்துகொள்ள மறுத்த கள்ளக்காதலியை கள்ளக்காதல் துப்பாக்கியால் சுட்ட விவகாரத்தில் இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.