அரியலூர் மாவட்டத்தை அடுத்த விக்கிரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கலியன் (எ) கருணாநிதி(54). கூலி தொழிலாளி. இவர் கடந்த ஜூலை மாதம் 8 வயது சிறுமியை நைசாக மறைவான இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதேபோல், அடிக்கடி மிரட்டி சிறுமியை சீரழித்து வந்துள்ளார்.
9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கிழவனுக்கு ஆயுள்தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தை அடுத்த விக்கிரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கலியன் (எ) கருணாநிதி(54). கூலி தொழிலாளி. இவர் கடந்த ஜூலை மாதம் 8 வயது சிறுமியை நைசாக மறைவான இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதேபோல், அடிக்கடி மிரட்டி சிறுமியை சீரழித்து வந்துள்ளார். இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இதனால், வெளியே சொல்லாமல் இருந்து வந்த சிறுமி திடீரென ஒருநாள் பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, கலியன் (எ) கருணாநிதி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதததங்களும் நிறைவு பெற்றதை அடுத்து தீர்ப்பு நீதிபதி ஆனந்தன் தீர்ப்பு வழங்கினார்.
அதில், கலியன் என்ற கருணாநிதியின் குற்றம் உறுதியானதை அடுத்து ஆயுள் தண்டனையும், ரூ.11,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.7 லட்சம் நிவாரணத்தொகை அரசு வழங்கவும் உத்தரவிட்டார்.