என் கணவருக்கு சரக்கு வாங்கி கொடுத்தே என்னை 5 முறை கற்பழித்தார்... எஸ்.பி-யிடம் கதறி அழுத பெண்!!

Published : May 02, 2019, 08:12 PM ISTUpdated : May 02, 2019, 08:14 PM IST
என் கணவருக்கு சரக்கு வாங்கி கொடுத்தே என்னை 5 முறை கற்பழித்தார்... எஸ்.பி-யிடம் கதறி அழுத பெண்!!

சுருக்கம்

 ஈரோடு எஸ்.பியிடம், ‘என்னுடைய கணவருக்கு மது வாங்கிக் கொடுத்து அடிமையாக்கி,  ராதாகிருஷ்ணன் என்னை ஐந்து முறை மிரட்டி கற்ப்பழித்தான்’ என புகார் அளித்துள்ளது அடுத்த பரபரப்பைப் ஏற்படுத்தியிருக்கிறது.  

‘என்னுடைய கணவருக்கு மது வாங்கிக் கொடுத்து அடிமையாக்கி,  ராதாகிருஷ்ணன் என்னை ஐந்து முறை மிரட்டி கற்ப்பழித்தான்’ என புகார் அளித்துள்ளது அடுத்த பரபரப்பைப் ஏற்படுத்தியிருக்கிறது.

ஆபாச வீடியோ எடுத்துப் பலமுறை மிரட்டி பெண்களை கற்பழித்ததாக தொழிலதிபர் மீது கல்லூரி மாணவி ஒருவர் சில நாள்களுக்கு முன்பு ஈரோடு எஸ்.பி-யிடம் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனையடுத்து, சம்பந்தப்பட்ட ராதாகிருஷ்ணன் என்பவரை போலீஸார் கைதுசெய்தனர். 

இந்த ராதாகிருஷ்ணன் ஏற்கனவே ஏராளமான கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

ராதாகிருஷ்ணன் கைதான தகவல் அறிந்ததும் திருமணமான பெண் ஒருவர் இன்று ஈரோடு எஸ்.பியிடம், ‘என்னுடைய கணவருக்கு மது வாங்கிக் கொடுத்து அடிமையாக்கி,  ராதாகிருஷ்ணன் என்னை ஐந்து முறை மிரட்டி கற்ப்பழித்தான்’ என புகார் அளித்துள்ளது அடுத்த பரபரப்பைப் ஏற்படுத்தியிருக்கிறது.

ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் சந்திரா  என்ற பெண், ஈரோடு எஸ்.பி-யிடம் அளித்துள்ள புகார் மனுவில், எனக்கு 5 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். என்னுடைய கணவர் குடிப்  பழக்கம் உடையவர். அவருக்கு ஒயின்ஷாப்பில் ராதாகிருஷ்ணன் என்பவர் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு, என்னை பற்றி தெரிந்துகொண்ட அவர், தினமும் என்னுடைய கணவருக்கு அவர் மது வாங்கிக் கொடுத்து, அவரை அடிமையாக்கியிருக்கிறார். 

ஒரு நாள் என் வீட்டுக்காரர்  அந்த ராதாகிருஷ்ணனை வீட்டுக்கு அழைத்து வந்து, நண்பர் என்று அறிமுகப்படுத்தியதால், சாப்பாடு போட்டு உபசரித்து அனுப்பினேன். அதையடுத்து, என்னுடைய மகன் பிறந்தநாள் அன்று, என் கணவருடன் சரக்கு போதையில் மறுபடியும் என் வீட்டுக்கு வந்தார். அதன்பிறகு என்னுடைய கணவர் அப்போதிலிருந்து என்னிடம் அடிக்கடி சண்டை போட்டுவந்தார். ஒருகட்டத்தில், என் கணவருடைய தொல்லை தாங்காமல், நான் சாகும் முயற்சியில் இறங்கினேன். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் என்னைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.

 மருத்துவமனையில் வந்து என்னைப் பார்த்த ராதாகிருஷ்ணன், குழந்தையைப் பாத்துக்கோ, உனக்கு நான் இருக்கேன் என நான் வேண்டாம் என்று சொல்லியும், என் மகனிடம் 2 ஆயிரம் ரூபாயைக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். 

நான் மருத்துவமனையில் இருந்து சரியாகி வீட்டுக்கு வந்தபிறகு, ஒருநாள் வீட்டுக்கு வந்த ராதாகிருஷ்ணன், என்னை தொட்டுப் பேசினார்,கண்டா இடத்தில் கைவைத்து தவறாக நடந்துகொண்டார். ‘உன் குழந்தைகளை நான் பாத்துக்கிறேன், உன்னை ராணி மாதிரி வச்சு பாத்துக்கிறேன்’ எனக்கூறி என்னை மிரட்டியதோடு, பாலியல் வன்கொடுமை செய்தார். இதனைத் தொடர்ந்து சுமார் ஐந்து முறை என்னை பலாத்காரம் செய்தார்.

இந்தக் கொடுமையை நான் வெளியே சொல்ல முடியாமல் தவித்துவந்தேன். ஆனால், தற்போது அவரைப் பற்றி டிவியில் வந்த செய்திகளைப் பார்த்து, புகார் அளிக்க வந்திருக்கிறேன். என்னைப்போன்ற ஏழைப் பெண்களை, இந்த மாதிரியான காமக்கொடூரர்களிடமிருந்து காப்பாற்றுங்கள்’ எனக் கண்ணீர்மல்கக் கூறியிருக்கிறார். 

PREV
click me!

Recommended Stories

சித்தப்பா சொல்லி.! கோவையில் 26 வயது இந்திராணியும் 41 வயது நபரும்! வசமாக சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்!
மருமகளின் தலையை தனியாக துண்டித்த மாமியார்.. நந்தினி மீது எதுக்கு இவ்வளவு கோபம்.! பரபரப்பு தகவல்!