பொள்ளாச்சி எதிரொலி? ஆடியோவை வைத்து மீண்டும் மீண்டும் மிரட்டல்..! தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் பெண் கவுன்சிலர் குடும்பம்..! ஆவடியில் பகீர்..!

By ezhil mozhiFirst Published Mar 14, 2019, 8:09 PM IST
Highlights

பொள்ளாச்சி விவகாரம் சூடு பிடித்து உள்ள நிலையில், தற்போது ஆவடியில் பெண் கவுன்சிலர் ஒருவர் பேசிய ஆடியோவை வைத்து தொடர் மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும் வேளையில் இறங்கி  உள்ளது ஒரு கும்பல். 

பொள்ளாச்சி விவகாரம் சூடு பிடித்து உள்ள நிலையில், தற்போது ஆவடியில் பெண் கவுன்சிலர் ஒருவர் பேசிய ஆடியோவை வைத்து  தொடர் மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும் வேளையில் இறங்கி உள்ளது ஒரு கும்பல். இதனால் அந்த முன்னாள் பெண் கவுன்சிலரின் குடும்பமே தற்கொலை செய்துகொள்ளும் மன நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர் 

சென்னை ஆவடி நகராட்சியில் உள்ள வார்டு ஒன்றில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் பெண் கவுன்சிலரின் கணவர் தான் இப்படி ஒரு பாதிப்பில் உள்ளதாக தாமாக முன் வந்து பிரபல நாளிதழுக்கு பேட்டி கொடுத்து உள்ளார்.

அதில், "என் மனைவி திமுக சார்பில் போட்டியிட்டு கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2017 ஆம் ஆண்டு என் மனைவிக்கு திருநின்றவூரிலிருந்து வந்த டிரைவருடன் அறிமுகம் கிடைத்து உள்ளது. இவருடன் பேசிய சில ஆடியோக்கள் மொபைலில் வைத்திருந்தார். இதற்கிடையில் 9.8.2017 அன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பட்டாபிராமைச் சேர்ந்த ஒருவர் என் மனைவியிடம் போட்டோ எடுத்துவிட்டு, மனைவியின் மொபைலில் இருந்து அவருடைய மொபைலுக்கு ஷேர் இட் மூலம் போட்டோவை பகிர்ந்துள்ளார்  

அப்போது இந்த ஆடியோவையும் பகிர்ந்துகொண்டு உள்ளார் அந்த நபர். அதன் பின் அந்த ஆடியோ கட்சியில் உள்ள பல பேருக்கு அனுப்பி உள்ளார். இது குறித்து போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. அந்த மொபைல் எண் கொடுத்து புகார் அளிக்கும் போது, ஏற்கனவே அந்த போன் தொலைந்துவிட்டது என அந்த குறிப்பிட்ட நபர் போலீசில் விளக்கம் அளித்துள்ளாராம். ஆனால் அது உண்மை அல்ல, வேறு வேறு எண்ணில் இருந்து ஆடியோவை பகிர்ந்து எங்களை மிரட்டி வருகின்றனர். இதனால் மிகுந்த மன உளைச்சலில் உள்ளோம்.  

தற்போது அந்த பகுதியில் வசிக்காமல் வீட்டை காலி செய்து விட்டு வேறு இடத்திற்கு சென்று விட்டோம். ஆனால்,அந்த குறிப்பிட்ட நபர் எங்களை தொடர்ந்து டார்ச்சர் செய்து வருகிறார். இதற்கு போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இனியும் எடுக்க வில்லை என்றால் நான் மற்றும் என் மனைவி, 2 பெண் பிள்ளைகள் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளும் முடிவில் உள்ளோம் என தெரிவித்து உள்ளார்.

பொள்ளாச்சி விவகாரம் சூடு பிடித்து உள்ள நிலையில், மீண்டும் இது போன்ற பல பிரச்சனைகள் கண்ணுக்கு தெரியாமல் நடந்து வருகின்றன என்பதற்கு இது ஒரு உதாரணம். மேலும் போலீசார் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா ? அல்லது மெத்தனம் காண்பிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.  

click me!