அடித்து நொறுக்கப்பட்டது என்னுடைய பார் இல்ல... பார் நாகராஜ் ஹேப்பி பேட்டி!!

By sathish kFirst Published Mar 14, 2019, 7:32 PM IST
Highlights

நான், பார் தொழிலை விட்டே பல மாசம் ஆகிறது, நேற்று அடித்து நொறுக்கப்பட்டது என்னுடைய பார் அல்ல என்று அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பார் நாகராஜ் ஹேப்பியாக தெரிவித்துள்ளார். 

நான், பார் தொழிலை விட்டே பல மாசம் ஆகிறது, நேற்று அடித்து நொறுக்கப்பட்டது என்னுடைய பார் அல்ல என்று அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பார் நாகராஜ் ஹேப்பியாக தெரிவித்துள்ளார். 

பொள்ளாச்சியில் இளம்பெண்கள், மாணவிகளை ஃபேஸ்புக்கில் நட்பாக பழகியும், காதலித்தும், அவர்களை பண்ணைவீட்டுக்கு அழைத்து சென்று மிரட்டி நிர்வாணப்படங்கள் எடுத்து, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் மீது குண்டர் சட்டம் தொடுக்கப்பட்டுள்ளது.

இவர்களை அடுத்து பொள்ளாச்சி பாலியல் மேட்டரில் சிக்கியுள்ள  அதிமுக பிரமுகரான ‘பார்’ நாகராஜை தப்பவைக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. பொள்ளாச்சி அம்மா பேரை 34ஆவது வார்டு பொறுப்பாளராக இருந்த இவரை, கடந்த வாரம் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தது  கட்சித் தலைமை. இந்த விவகாரத்தில் புகார் தெரிவித்த பெண்ணின் சகோதரரைத் தாக்கிய வழக்கில்  பார் நாகராஜ் சம்பந்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருந்தது காவல் துறை. இதனால் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், அவருக்குச் சொந்தமான பார் அடித்து நொறுக்கப்பட்டது. பொள்ளாச்சி கோட்டூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையின் உள்ளே இருக்கும் டாஸ்மாக் பார், இவரால் குத்தகைக்கு எடுக்கப்பட்டுச் செயல்பட்டு வந்தது. இந்த சம்பவத்தின்போது, சுமார் 50க்கும் மேற்பட்டோர் மதுபானக் கடைக்கு அருகே கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதன்பின்னர், அங்கு வந்த காவல் துறையினர் மோதலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், நேற்று  பார் நாகராஜ் இரண்டு பெண்களுடன் இருப்பது போன்ற வீடியோக்கள் வெளியானது. முன்னணி தொலைக்காட்சியில் வீடியோ வெளியானது. அதில், பாதிக்கப்பட்ட அந்த பெண்களின் முகங்கள் மறைக்கப்பட்டிருந்தன. இந்த வீடியோக்களை சபரிராஜன், சதீஷ் இருவரும் எடுத்ததாகக் கூறப்படுகிறது. அந்த பெண்களை மிரட்டிப் பணிய வைப்பது அந்த வீடியோவில் தெரிய வந்திருக்கிறது. தற்போது பார் நாகராஜ் தலைமறைவாக இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், பொள்ளாச்சி சம்பவத்தில் தன்னை தொடர்புப்படுத்தியும், தான் தலைமறைவாகிவிட்டதாகவும் வதந்திகள் பரவுவது குறித்து விளக்கமளிப்பதற்காக பார் நாகராஜ் கோவை ஆட்சியர் ராஜாமணியை சந்தித்து மனு அளித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த போது  பார் நாகராஜ்; பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தொடர்புள்ள திருநாவுக்கரசு, சதீஷ் ஆகியோர் எனக்கு நட்பு ரீதியாக மட்டுமே பழக்கம். நான் அதிமுகவில் இருப்பதால் என் மீது வேண்டாதவர்கள் இந்த பிரச்னையை  பூதாகாரமாக்குகின்றனர்.

என் மீது பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணணை மிரட்டியதாக அடிதடி வழக்கு இருந்து வருகிறது. அது தொடர்பாக விசாரணை செய்து மாஜிஸ்ரேட் என்னை ஜாமீனில் வெளியிட்டார். இதில் எந்த வித அரசியல் உள்நோக்கமும் கிடையாது. நான் பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை மிரட்டவோ அடிக்கவோ இல்லை வேண்டுமென்றால் அதை அவரிடமே கேட்டு பாருங்கள்.

மேலும், பொள்ளாச்சி பாலியல் தொடர்பாக வெளியான வீடியோவில் என் முகத்தை மார்பிங் செய்து வெளியிட்டு உள்ளார்கள். அதற்கான ஆதாரமும் என்னிடம் உள்ளது. அதுமட்டுமல்ல பொள்ளாச்சியில் அடித்து நொறுக்கப்பட்ட டாஸ்மாக் பக்கத்தில் இருக்கும் பார் என்னுடையது இல்லை. நான் பார் தொழிலை விட்டு 10 மாதங்கள் ஆகிவிட்டன. நான் தலைமறைவாக உள்ளேன் என வதந்திகளும் பரவுகின்றன அதுவும் பொய். இதற்காக மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க இங்கு வந்துள்ளேன் என்றார்.

click me!