தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து சிறுமி படுகொலை..!

Published : Jan 19, 2019, 04:13 PM IST
தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து சிறுமி படுகொலை..!

சுருக்கம்

சென்னையில் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து நான்கரை வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து நான்கரை வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள எம்.கைகாட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி சஜிதா (வயது 32). இவர்களது மகள்கள் சுபாஷினி (14), ஸ்ரீஹர்ஷினி (4). பிரபாகரன் கடந்த 1 வருடத்துக்கு முன்பு இறந்து விட்டார். 

எனவே சஜிதா பிரபாகரன் வேலை பார்த்த சென்னையை சேர்ந்த மனோஜ் என்பவருக்கு சொந்தமான பங்களாவில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை முதல் சஜிதாவின் நான்கரை வயது மகள் ஸ்ரீஹர்ஷினி திடீரென காணாமல் போனார். உடனே காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், பங்களாவை முழுவதும் சோதனை செய்தனர். அப்போது 8 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்தனர். அதில் ஸ்ரீஹர்ஷினி சடலமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தண்ணீர் தொட்டியின் மூடி இரும்பால் செய்யப்பட்டது. மூடியை சிறுமி திறக்க வாய்ப்பு இல்லை. எனவே அந்த சிறுமி தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து படுகொலை செய்யப்பட்டது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த படுகொலை சம்பவத்தில் சிறுமியின் தாய் சஜிதாவிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

கண் விழித்து பார்த்த மருத்துவ மாணவி.! சிதறி கிடந்த ஆடைகள்.! ஒரு வேகத்தில் அப்படி செஞ்சுட்டேன்.! டாக்டர் கதறல்
அடங்காத 26 வயது அண்ணி சாந்தி.. தீராத வெறியில் இருந்த கொழுந்தன்.. இறுதியில் நடந்த அலறல் சத்தம்.!