டெல்லி நீதிமன்ற வளாகத்தில் பயங்கரம்.. பிரபல ரவுடி உட்பட 4 பேர் சுட்டுக்கொலை.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்.!

Published : Sep 24, 2021, 02:53 PM ISTUpdated : Sep 24, 2021, 03:24 PM IST
டெல்லி நீதிமன்ற வளாகத்தில் பயங்கரம்.. பிரபல ரவுடி உட்பட 4 பேர் சுட்டுக்கொலை.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்.!

சுருக்கம்

பிரபல தாதா ஜிதேந்தர் கோகி கொள்ளை கூட்டத்தின் தலைவனாக செயல்பட்டு வந்தார். இவர் ஏற்கனவே போலீசார் கைது செய்யப்பட்டு டெல்லி ரோஹிணி கீழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொண்டு வரப்பட்டார். அப்போது, வழக்கு விசாரணையின் போது ஜிதேந்தர் கோகி தப்பி செல்ல முயற்சித்துள்ளார். 

டெல்லி ரோஹிணி கீழமை நீதிமன்றத்தில் பிரபல ரவுடி ஜிதேந்தர் கோகி உள்பட 4 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிரபல தாதா ஜிதேந்தர் கோகி கொள்ளை கூட்டத்தின் தலைவனாக செயல்பட்டு வந்தார். இவர் ஏற்கனவே போலீசார் கைது செய்யப்பட்டு டெல்லி ரோஹிணி கீழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொண்டு வரப்பட்டார். அப்போது, வழக்கு விசாரணையின் போது ஜிதேந்தர் கோகி தப்பி செல்ல முயற்சித்துள்ளார். அந்த சமயத்தில் தான் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. 

குறிப்பாக போலீசாருக்கு, ரவுடி கும்பலுக்கும் இடையே இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றதா அல்லது இரண்டு தரப்புக்கும் இடையே  இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றதா என்பது பற்றிய முழுமையான தகவல்கள் இதுவரை தெரியவில்லை. இந்த சம்பவத்தில் 4 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். 10 பேர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, நீதிமன்றம் வளாகம் முழுவதும் டெல்லி போலீசார் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.  

துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் வழக்கறிஞர்கள் போல உடை அணிந்து வந்ததாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கிச்சூட்டால் உயிரிழந்த ஜிதேந்தர் கோகி 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!