
ஆந்திரா - கறி விருந்து :
ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த நண்பர்கள் ஷேர்கான், சிவா. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற விருந்து ஒன்றில் உணவு பரிமாறிய ஷேர்கான் சிவாவிற்கு குறைவாக இறைச்சி துண்டுகளை போட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசம் அடைந்த சிவா, ஷேர்கானை அன்றிரவு கத்தியால் குத்தி காயப்படுத்தினார். இந்த சம்பவம் தொடர்பாக. ஷேர்க்கான் அளித்த புகாரின் பேரில் கடப்பா போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் நேற்று தன்னுடைய வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த சிவாவை, ஷேர்க்கான் நண்பர்கள் 2 பேர் சமாதான பேசலாம் என்று கூறி அழைத்து சென்றனர். இதற்கிடையில் டிஸ்சார்ஜ் ஆன ஷேர் கான் தனது நண்பர்கள் உதவியுடன் சிவாவை கொலை செய்ய திட்டம் தீட்டியிருக்கிறார். நேற்றிரவு தனது வீட்டுக்கு அருகே நின்று கொண்டிருந்த சிவாவை ஷேர்கானின் நண்பர்கள் 2 பேர், சமாதானம் பேசலாம் என கூறி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர்.
கொலை சம்பவம் :
அங்கு வைத்து சிவாவை கொலை செய்து சடலத்தை ஆட்டோவில் ஏற்றிச் சென்று குழிதோண்டிப் புதைத்துள்ளனர். சிவாவை காணவில்லை என பெற்றோர் அளித்த புகார் மீது போலீசார் நடத்திய விசாரணையில் இந்த கொலை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்நிலையில் கொலையாளிகள் இருவரை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள ஷேர்கானையும் தேடி வருகின்றனர். விருந்தில் கறித்துண்டு கம்மியாக வைத்ததால் கொலை செய்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.