ஃபயர் சதீஷுக்கு உர மாஃபியாக்கள் மிரட்டல்..! பின்னணியில் சர்ச்சை பிரமுகர்..! வெளியான ஆடியோ..!

Published : Nov 19, 2025, 05:18 PM IST
Fertilizer

சுருக்கம்

உர விற்பனை மார்க்கெட்டுகளை கண்காணித்தும், சரக்கு சப்ளை செய்தும் வருகிறார் ஃபயர் சதீஷ். அதனை தனது கன்ட்ரோலில் வைக்க பாஜக சர்ச்சைப் புள்ளியும், அவரது ஆதரவாளர் ஒருவரும் அதிகார போட்டியில் இறங்கியிருக்கிறார்கள்.

 

பாஜக பிரச்சார பிரிவு நிர்வாகி ஃபயர் சதீஷு க்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தில் முன்பு சர்ச்சையில் சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பதவிக்கு வந்துள்ள பா.ஜ.க பிரமுகருக்கு தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

பாஜக நிர்வாகி ஃபயர் சதீஷ் உர விற்பனை தொடர்பான தொழிலை செய்துவருகிறார். இவருக்கு மூன்று மாநிலத்தை சேர்ந்த உர மாஃபியாக்கள் தொழில்போட்டியில் விட்டுக்கொடுக்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுத்தாகக்கூறப்படுகிறது. ஃபயர் சதீஷுக்கு நெருக்கடிக் கொடுக்க வைத்ததே முன்பு சர்ச்சையில் சிக்கி மீண்டும் பாஜகவில் பதவிக்கு வந்துள்ள பிரமுகர்தான் என்கிறார்கள். எம்.இ.பி. தொழில்துறை வளாகத்திலும், டெல்லியில் கோலோச்சுபவரின் பெயரைச் சொல்லி அந்த பாஜக சர்ச்சைப் புள்ளியும், அவரது ஆதரவாளர் ஒருவரும் நிறுவனங்களை மிரட்டி பணம் பறித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இதுகுறித்து பேசிய பா.ஜ.கவினர், ‘‘உர விற்பனை மார்க்கெட்டுகளை கண்காணித்தும், சரக்கு சப்ளை செய்தும் வருகிறார் ஃபயர் சதீஷ். அதனை தனது கன்ட்ரோலில் வைக்க பாஜக சர்ச்சைப் புள்ளியும், அவரது ஆதரவாளர் ஒருவரும் அதிகார போட்டியில் இறங்கியிருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து, பாஜக நிர்வாகியின் ஆதரவாளர், ஃபயர் சதீஷை போனில் தொடர்பு கொண்டு ‘‘நீ என்ன ஆட்டிடுவ… உன்ன காலி பண்ணிடுவேன்… வீட்டுக்கே வந்து… 12 மணி நேரம் தான் டைம்… வாட்சப் பேஸ்புக்ல போட்டாலும் உன்னை காலி பண்ணிடுவேன்’’ என பகிரங்கமாக கொலை மிரட்டலை விடுத்த ஆடியோவும் வெளியாகி இருக்கிறது.

பாஜக பிரமுகருக்கும், தொலைபேசியில் மிரட்டியவருக்கும் உள்ள தொடர்புகளும் வெளியாகி இருக்கிறது. மிரட்டல் விடுத்த நபர் பாஜக பிரமுகரின் ஆதரவுடன் கட்சியில் இணைந்தவர். பாஜகவில் மேல்மட்டத்தில் செல்வாக்கு உள்ளதாகக் கூறி தங்களது ஆதரவாளரை வைத்து தாம்பரம் எம்.இ.பி. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களையும், ஒப்பந்தங்களையும் கண்ட்ரோல் செய்து பணம் சம்பாதித்து வருகிறார்கள்.

நிர்வாகிகளை மிரட்டுதல், தொழில்துறை ஒப்பந்தங்களில் தலையிடுதல், போட்டி வர்த்தக நிறுவனங்களுக்கு தொல்லை கொடுத்து மிரட்டல் வன்முறை என தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். இவர்களால் மக்கள் அச்சத்துடன் இருக்கிறார்கள். சர்ச்சையில் சிக்கி மீண்டும் பாஜகவில் லைம் லைட்டுக்கு வந்துள்ள அவர் சில மாதங்களே ஆன நிலையில் இப்போதும் அவர் சர்ச்சையில் சூழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

புதிய வகை ஆன்லைன் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் முதல் AI வாய்ஸ் வரை - தப்பிப்பது எப்படி?
காதல் கல்யாணம் பண்ண மூன்றே மாசத்துல என் பொண்ண கொன்னுட்டாங்களே! நெஞ்சில் அடித்து கதறும் தாய்