
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடந்த ஒரு துயர சாலை விபத்தில், தனது இரண்டாவது குழந்தையைப் பெறுவதற்கு சில வாரங்களே காத்திருந்த நிலையில், 33 வயதான இந்திய வம்சாவளி பெண் ஒருவர் பலியானார். அவரது கணவர், மகன் கண் முன்னே இந்த சோகம் நிகழ்ந்தது. இந்த விபத்து, அவரது குடும்பத்தினரையும், அப்பகுடி மக்களையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
இந்த விபத்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் சிட்னியின் ஹார்ன்ஸ்பை பகுதியில் நடந்தது. எட்டு மாத கர்ப்பிணியான சமன்விதா தரேஷ்வர், தனது கணவர், மூன்று வயது மகனுடன் வழக்கமான மாலை நடைப்பயிற்சிக்காக வெளியே சென்றிருந்தார். விபத்தை நேரில் கண்ட சாட்சிகள், காவல்துறையின் தகவல்படி, அந்தக் குடும்பத்தினர் நடைபாதையைக் கடப்பதற்காக அவர்கள் சென்ற கியா கார்னிவல் காரின் வேகத்தைக் குறைத்துள்ளனர். அந்த நேரத்தில், வேகமாக வந்த பிஎம்டபிள்யூ கார் ஒன்று பின்னால் இருந்து கியா கார் மீது மோதியதால், கியா முன்ன இழுத்துச் சென்று விபத்துக்குள்ளானது. இதில் ஐடி பெண் தரேஷ்வர் விபத்தில் படுகாயமடைந்தார். அவர் உடனடியாக வெஸ்ட்மீட் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, மருத்துவர்களால் அந்த கர்ப்பிணி பெண்ணை காப்பாற்ற முடியவில்லை.
விசாரணைகளில் பிஎம்டபிள்யூ காரை பி-பிளாட்டரான 19 வயது ஆரோன் பாபசோக்லு ஓட்டிச் சென்றது தெரியவந்தது. அவர் டெம்பிரவரி ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர். காவல்துறை தகவலின்படி, அவரது வாகனம் அதிவேகத்தில் பயணித்ததால் கர்ப்பிணி பெண் குடும்பத்தார் சென்ற கியா காரில் மீது மோதியது.
இரண்டு வாகனங்களின் ஓட்டுநர்களும் காயமின்றி தப்பினர். ஆனால் ஒரு இளம் தாயும், அவரது கருவில் இருந்த குழந்தையும் சில நொடிகளில் தங்கள் உயிரை இழந்தனர். சாலையில் நிதானமின்றி அதிவேகமாக சென்ற இளம் ஓட்டுநரின் பொறுப்பற்ற செயல் ஒரு குடும்பத்தை அழைத்து விட்டது.
குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். அவர் மீது பல வழக்குகள் படிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் போலீசார் அந்த மைனர் ஓட்டுநரை அவரது வஹ்ரூங்கா வீட்டில் கைது செய்தனர். 2022-ல் நியூ சவுத் வேல்ஸில் இயற்றப்பட்ட ஜோயின் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படும் என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். பிறக்காத குழந்தையின் மரணத்திற்கு வழிவகுக்கும் குற்றங்களுக்காக அங்கு உள்ள சட்டத்தின் மூலம் அவருக்கு அதிக தண்டனை வழங்கப்படும். இதுபோன்ற வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனைக்கு கூடுதலாக மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். குற்றத்தின் தீவிரத்தை உணர்ந்த நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் மறுத்தது.
சமன்விதா தரேஷ்வர் யார்? அவரது லிங்கிடு இன் சமூகவலைதள தகவலில்படி தரேஷ்வர் ஒரு திறமையான ஐடி நிபுணர். வணிக பயன்பாட்டு நிர்வாகத்தில் நிபுணத்துவம் பெற்றவர். அவர் அல்ஸ்கோ யூனிஃபார்ம்ஸில் சோதனை ஆய்வாளராகப் பணிபுரிந்தவர். அமைதியான, நிலையான குடும்ப வாழ்க்கையை நடத்தி வந்தவர். விபத்தில் அவரது கணவரோ, இளம் மகனோ உடல் ரீதியாக காயமடைந்தார்களா என்பதை போலீசார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், குடும்பத்தில் ஏற்பட்ட உணர்ச்சி ரீதியான பாதிப்பு அளவிட முடியாதது. அவரது கணவர், குழந்தையின் வாழ்க்கை ஒரே நொடியில் நிரந்தரமாக மாறிவிட்டது.