மகளுடன் 3 மாதம் குடும்பம் நடத்திய பின் திருமணம் செய்ய மறுப்பு ! கம்பியூட்டர் மெக்கானிக்கை சரமாரியாக வெட்டிய தந்தை !!

Published : Jul 17, 2019, 09:33 PM IST
மகளுடன்  3 மாதம் குடும்பம் நடத்திய பின் திருமணம் செய்ய மறுப்பு ! கம்பியூட்டர் மெக்கானிக்கை சரமாரியாக வெட்டிய தந்தை !!

சுருக்கம்

சென்னையில்  மகளுடன் 3 மாசம் பழகி, குடும்பம் நடத்திவிட்டு, கடைசியில் ஏமாற்ற முயன்ற இளைஞரை  தந்தை தாறுமாறாக அரிவாளால் வெட்டிய சம்பவம் பெருட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அம்பத்தூரைச் சேர்ந்த  சக்திவேல் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். . இவரது மூத்த மகள் சத்யபிரியா சென்னை சட்டக்கல்லூரியில் படித்து வந்தார். இவருக்கு ஃபேஸ்புக்கில் லாரன்ஸ் என்பவர் நண்பரானார்.

லாரன்ஸ் அம்பத்தூரில் உள்ள ரெயில்வே ஸ்டேஷன் சாலையில் கம்ப்யூட்டர் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் ஏற்பட்ட பழக்கம் பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. பின்னர் ரெண்டு பேரும் நெருக்கமாக பழகி வந்தாகவும் கூறப்படுகிறது.

சக்திபிரியா  - லாரன்ஸ் காதலை அறிந்த அவரது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொள்ளாமல்  அவர்கள் இருவரும் தனியாக வீடு எடுத்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இதனிடையே  காதலர்களுக்கு  இடையே சண்டை வந்ததால்  சத்யபிரியா பெற்றோருடன் வந்து சேர்ந்துவிட்டார். 

இந்நிலையில் லாரன்ஸ் கடைக்கு தனது மகளுடன் சென்ற சக்திவேல், இருவரும் சேர்ந்து வாழும்படி கூறியுள்ளார். இதற்கு லாரன்ஸ் மறுப்பு தெரிவிக்கவும், ரெண்டு பேருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் கடும் ஆத்திரம் அடைந்த சக்திவேல் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் லாரன்சை சரமாரியாக வெட்டினார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கடைக்குள் இருந்தவர்கள் அலறியடித்து கொண்டு ஓடினார்கள். 

பின்னர் அங்கிருந்த சிலர்  லாரன்ஸை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் சத்யபிரியாவின் அப்பா சக்திவேலை கைது செய்து விசாரணை நடத்தினர்.

PREV
click me!

Recommended Stories

வழக்கறிஞர் சொல்லி எஸ்.ஐ. மடக்கி கதறவிட்ட அலமேலு.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி
போதையில் இளைஞர்கள் அட்டூழியம்.. பள்ளி மாணவிகள் பின்னே சென்று அட்ராசிட்டி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்