டாஸ்மாக் பாரில் திபுதிபுவென நுழைந்த 10 பேர் கொண்ட கும்பல்.. பிரபல ரவுடியை வெட்டி கூறுபோட்டு எஸ்கேப்..!

Published : May 10, 2022, 10:36 AM IST
டாஸ்மாக் பாரில் திபுதிபுவென நுழைந்த 10 பேர் கொண்ட கும்பல்..  பிரபல ரவுடியை வெட்டி கூறுபோட்டு எஸ்கேப்..!

சுருக்கம்

நேற்று காலை 9 மணியளவில் பாரில் மூர்த்தி பேசிக்கொண்டிருந்தபோது 10 பேர் கொண்ட கும்பல் பாருங்குள்அதிரடியாக நுழைந்து அங்கு நின்றிருந்த ரவுடி மூர்த்தியை வீச்சரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். பலத்த வெட்டுக்காயங்களுடன் ரவுடி மூர்த்தி  ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து உயிரிழந்ததை பார்த்து பார் ஊழியர்கள் அலற சத்தம் போட்டனர். 

மீஞ்சூர் அருகே டாஸ்மாக் பார் நடத்தி வந்த பிரபல ரவுயை 10 பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிரபல ரவுடி

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள வாயலூர் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி (38). பிரபல ரவுடியான இவர் மீது 3 கொலை உள்பட 28 வழக்குகள் நிலுவையில் உள்ளது. மலர் என்ற மனைவியும் 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். மூர்த்தி, திருவெள்ளைவாயல் டாஸ்மாக் கடை அருகே பார் நடத்திவந்தார்.

டாஸ்மாக் பாரில் கொலை

இந்நிலையில், நேற்று காலை 9 மணியளவில் பாரில் மூர்த்தி பேசிக்கொண்டிருந்தபோது 10 பேர் கொண்ட கும்பல் பாருங்குள்அதிரடியாக நுழைந்து அங்கு நின்றிருந்த ரவு மூர்த்தியை வீச்சரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். பலத்த வெட்டுக்காயங்களுடன் ரவுடி மூர்த்தி  ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து உயிரிழந்ததை பார்த்து பார் ஊழியர்கள் அலற சத்தம் போட்டனர். 

முன்விரோதம் காரணம்

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ரவுடி மூர்த்தி முன்விரோதம் காரணம் வெட்டி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. 

PREV
click me!

Recommended Stories

ஐடி நிறுவன பெண் மேலாளர் ஓடும் காரில் வைத்து கூட்டு பலாத்காரம்! ரசித்த மற்றொரு பெண்.. CEO செய்த கொடூரம்
இது இருக்கறதாலதான பொண்ணுங்க கூட ஓவராக ஆட்டம் போடுற! ஃபுல் மப்பில் தூங்கிய கணவரை கதறி அலறவிட்ட மனைவி.!