#BREAKING : பிரபல ரவுடி கட்டை ராஜாவுக்கு தூக்கு தண்டனை.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

Published : Apr 12, 2022, 12:42 PM IST
#BREAKING : பிரபல ரவுடி கட்டை ராஜாவுக்கு தூக்கு தண்டனை.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

சுருக்கம்

ரவுடி ராஜா என்கிற கட்டை ராஜா மீது தமிழகத்தில் பல்வேறு காவல் நிலையத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. அதில், குறிப்பாக 2013ம் ஆண்டு கிருஷ்ணராயபுரத்தில் செந்தில் நாதன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக ரவுடி கட்டை ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

 2013ம் ஆண்டு செந்தில்நாதன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தஞ்சை ரவுடி கட்டை ராஜாவுக்கு தூக்கு தண்டனை விதித்து கும்பகோணம் கூடுதல் விரைவு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

கொலை வழக்கு

ரவுடி ராஜா என்கிற கட்டை ராஜா மீது தமிழகத்தில் பல்வேறு காவல் நிலையத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. அதில், குறிப்பாக 2013ம் ஆண்டு கிருஷ்ணராயபுரத்தில் செந்தில் நாதன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக ரவுடி கட்டை ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

நீதமன்றம் பரபரப்பு தீர்ப்பு

இதுதொடர்பான வழக்கு கும்பகோணம் நீதிமன்ற நீதிபதி பெஞ்சமின் ஜோசப் முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், செந்தில்நாதன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கட்டை ராஜாவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வழக்கில் மற்றொரு குற்றவாளி செல்வத்திற்கு ஆயுள் தண்டனையுடன், ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

திருமணமான 3 மாதத்தில் நிகிலா.. தடுக்க வந்த அண்ணன்.. இருவரின் கதையை முடித்ததும் வேறு வழியில்லாமல் தந்தை மகன் எடுத்த முடிவு
அதிமுக நகர இளைஞரணி இணைச் செயலாளரை தட்டித்தூக்கிய போலீஸ்.. வெளியான அதிர்ச்சி காரணம்!