கடைக்கு வந்த சிறுமிக்கு “போண்டா” கொடுத்து.. பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவர்.. இறுதியில் என்ன நடந்தது ?

Published : Apr 12, 2022, 10:05 AM IST
கடைக்கு வந்த சிறுமிக்கு “போண்டா” கொடுத்து.. பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவர்.. இறுதியில் என்ன நடந்தது ?

சுருக்கம்

கடைக்கு வந்த சிறுமியிடம் சுப்பையா போண்டா கொடுத்து உள்ளார். பிறகு சிறுமியை  தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

சென்னை, சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பையா (71). இவர் அப்பகுதியில் போண்டா கடை நடத்தி வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி சுப்பையா நடத்தி வரும் கடையில் அடிக்கடி போண்டா வாங்கச் செல்வது வழக்கம். சம்பவம் நடந்த தினமான 10.05.2017 அன்று கடைக்கு வந்த சிறுமியிடம் சுப்பையா போண்டா கொடுத்து உள்ளார். 

பிறகு சிறுமியை  தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனால் அந்த சிறுமியின் உடலில் அங்காங்கே காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தெரிந்து கொண்ட, சிறுமியின் பெற்றோர் கிண்டி அனைத்து மகளிர் நிலைய போலீசில் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா சுப்பையா மீது வழக்குபதிவு செய்து செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் வழக்கினை விசாரித்த நீதிபதி தமிழரசி சுப்பையாவுக்கு 10ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். அபராத தொகை கட்டத் தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

திருமணமான 3 மாதத்தில் நிகிலா.. தடுக்க வந்த அண்ணன்.. இருவரின் கதையை முடித்ததும் வேறு வழியில்லாமல் தந்தை மகன் எடுத்த முடிவு
அதிமுக நகர இளைஞரணி இணைச் செயலாளரை தட்டித்தூக்கிய போலீஸ்.. வெளியான அதிர்ச்சி காரணம்!