ஃபேஸ்புக்கில் நண்பர்களாகி ஓராண்டாக இளம் பெண்ணை கற்பழித்த 4 பேர் !! தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு !!

Published : Jul 18, 2019, 09:03 PM IST
ஃபேஸ்புக்கில் நண்பர்களாகி ஓராண்டாக இளம் பெண்ணை கற்பழித்த 4 பேர் !! தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு !!

சுருக்கம்

திருப்பதி அருகே  பேஸ்புக் வலைதளத்தில் நட்பாக பழகி திருமணமான இளம்பெண்ணை கடந்த ஓராண்டாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.   

ஆந்திர மாநிலம், அனந்தப்புரம் மாவட்டம், ராயதுர்கம் நகரை சேர்ந்த  ராமலிங்க ராஜு என்பருக்கும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அஞ்சலி என்பருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.  இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளான். அந்த பெண் தனது வீட்டின் அருகில் உள்ள கடையில் தினமும் சென்று பொருட்கள்  வாங்கி வருவது வழக்கம். அந்த கடையில் வேலை செய்யும் மகேஷ் என்ற வாலிபருடன் அஞ்சலிக்கு பழக்கம் ஏற்பட்டது.

இதனிடையே  பேஸ்புக் மூலமாக பவன், மல்லிகார்ஜுனா, ஷாருக் என்ற 3 பேரும் அஞ்சலியுடன்  தனித்தனியாக சாட்டிங் செய்து வந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் மூவரும் அஞ்சலியுடம் போன் நம்பர் பெற்று பேசி வந்தனர்.

அப்போது அஞ்சலி  3 பேரிடமும் தனக்கும் மகேஷுக்கும் உள்ள நட்பு குறித்தும் தெரிவித்தாராம். இதை கேட்ட 3 பேரும் மகேஷுடன் உள்ள பழக்கத்தை உனது குடும்பத்தினரிடம் தெரிவித்து விடுவவோம். அவ்வாறு தெரிவிக்காமல் இருக்க வேண்டுமென்றால் எங்கள் ஆசைக்கு இணங்க வேண்டும் என மிரட்டி வந்துள்ளனர்.

மேலும் அந்த  3பேரும், தங்களது விருப்பத்தை நிறைவேற்றாவிட்டால் உனது கணவர், குழந்தையை கொலை செய்து விடுவோம். உன் மீது ஆசிட் வீசுவோம் எனவும் மிரட்டல் விடுத்தார்களாம்.

இதற்கிடையே இளம்பெண்ணிடம் நட்பாக பழகி வந்த மகேஷும் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தாராம். இந்நிலையில் இளம்பெண்ணை மகேஷ், பவன், மல்லிகார்ஜுனா, ஷாருக் ஆகிய 4 பேரும் சேர்ந்து கடந்த ஓராண்டாக அடிக்கடி மிரட்டி கற்பழித்து வந்தனர்.

இதனால் மனவேதனையடைந்த அஞ்சலி வீட்டில் யாரும் இல்லாதபோது அதிகளவு தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்த்த அவரது உறவினர்கள் பவன் உள்ளிட்ட 4 பேர் மீதும் புகார் அளித்தனர். இதையடுத்து மகேஷ், பவன், மல்லிகார்ஜுனா, ஷாருக் ஆகிய 4 பேரையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

அட பாவிங்களா... ரூ.3 கோடி பணம்.. அரசு வேலைக்காக பாம்பை ஏவி தந்தை கொ**.. மகன்களின் சதி அம்பலமானது எப்படி?
காலி பாட்டிலுக்காக 5 ரூபாய் தகராறு.. பட்டப்பகலில் 3 குழந்தைகளின் தந்தை ஓட ஓட விரட்டி கொ**..! தூத்துக்குடியில் பயங்கரம்