தலைக்கேறிய போதையுடன் தகராறு செய்த வாலிபர்.. ஆபாசமாக பேசியதால் அடித்துக்கொலை!!

Published : Sep 24, 2019, 05:58 PM IST
தலைக்கேறிய போதையுடன் தகராறு செய்த வாலிபர்.. ஆபாசமாக பேசியதால் அடித்துக்கொலை!!

சுருக்கம்

திருச்சி அருகே மது போதையில் தகராறில் ஈடுபட்ட வாலிபர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே இருக்கும் பூலாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் நீலமேகம். இவரது மகன் வீரமுத்து(35). இவர் பல நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்திருக்கிறார். வேலைக்கு செல்லுமாறு அவரது தந்தை நீலமேகம் கண்டித்தும் அவர் கேட்கவில்லை என்று தெரிகிறது.

இதற்கிடையே அதிகமான குடிப்பழக்கத்திற்கு அடிமையான வீரமுத்து தினமும் தனது நண்பர்களுடன் சேர்ந்து குடித்திருக்கிறார். மதுபோதையில் அந்தப்பகுதியில் இருப்பவர்களிடம் அவர் தகராறில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த பகுதியில் இருப்பவர்கள் நீலமேகத்திடம் அவரது மகனை கண்டிக்குமாறு கூறியிருக்கின்றனர்.

சம்பவத்தன்றும் அதிகமாக குடித்த வீரமுத்து மது போதையில் அந்த பகுதியில் நடந்து செல்பவர்களையும் வாகனத்தில் செல்பவர்களையும் வழிமறித்து போதையில் தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இதனால் பலர் பயந்து மாற்றுப்பாதையில் சென்றிருக்கின்றனர். 

அப்போது அந்த வழியாக மாரியப்பன்(24), குபேந்திரன்(19) என்கிற இரண்டு சகோதரர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களையும் வழிமறித்து வீரமுத்து ஆபாசமாக பேசியிருக்கிறார். வீரமுத்து போதையில் இருப்பதை அறிந்த அவர்கள், அவரை கண்டித்திருக்கின்றனர். ஆனால் போதையில் தொடர்ந்து வீரமுத்து ஆபாசமாக பேசியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மாரியப்பன் மற்றும் குபேந்திரன், அருகில் கிடந்த கட்டையை எடுத்து வீரமுத்துவை சரமாரியாக தாக்கி இருக்கிறார்கள். இதில் பலத்த காயமடைந்த வீரமுத்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அந்த பகுதி வழியாக சென்றவர்கள் வீரமுத்துவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் வீரமுத்து உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறை வழக்கு பதிவு செய்து வீரமுத்துவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக இருக்கும் சகோதரர்கள் மாரியப்பன் மற்றும் குபேந்திரனை காவலர்கள் தேடி வருகிறார்கள். மது போதையில் தகராறு செய்தவரை அடித்துக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

PREV
click me!

Recommended Stories

கண் விழித்து பார்த்த மருத்துவ மாணவி.! சிதறி கிடந்த ஆடைகள்.! ஒரு வேகத்தில் அப்படி செஞ்சுட்டேன்.! டாக்டர் கதறல்
அடங்காத 26 வயது அண்ணி சாந்தி.. தீராத வெறியில் இருந்த கொழுந்தன்.. இறுதியில் நடந்த அலறல் சத்தம்.!