வரதட்சணை கொடுமை... வாட்ஸ்ஆப்பில் தகவல் தெரிவித்துவிட்டு இளம்பெண் கழிவறையில் தற்கொலை.!

By vinoth kumarFirst Published Jun 24, 2021, 3:54 PM IST
Highlights

வரதட்சணை கொடுமையால் வாட்ஸ்ஆப் மூலம் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வரதட்சணை கொடுமையால் வாட்ஸ்ஆப் மூலம் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் அருகே நிலமேல் பகுதியை சேர்ந்தவர் திரிவிக்ரமன் அவரது மகள் விஸ்மையா(26). ஆயுர்வேதம் படித்து வந்தார். அவருக்கும் மோட்டார் வாகன துறையில் சப்  இன்ஸ்பெக்டராக பணியாற்றும் கிரன்குமாருக்கும்  கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. ஆரம்பக் காலங்களில் இயல்பான வாழ்க்கையை நடத்தி வந்த விஸ்மயா நாட்கள் செல்ல செல்ல அவரின் வாழ்கையில் அனைத்தும் மாற தொடங்கிவிட்டது. கிரண் வரதட்சணை கேட்டு விஸ்மயாவை கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் விஸ்மயாவின் பெற்றோர் முன்னிலையில் கிரண் குடித்து விட்டு 100 பவுன் கேட்டு அவரை அடித்துள்ளார். இதனை கண்ட அப்பெண்ணின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, இரு தரப்பினரும் சமாதானம் செய்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், கிரண் வீட்டில் இருந்த விஸ்மயா தனது பெற்றோர் மற்றும் உறவினருக்கு வாட்ஸ் ஆப் மூலமாக தகவல் அனுப்பியுள்ளார். அதில், தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் தனது முடியை இழுத்து தாக்கியதாகவும் இதுகுறித்து யாரிடமும் சொல்லவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தான் காயத்துடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

இந்த சம்பவம் முடிந்த இரண்டே நாட்களில் விஸ்மயா குளியலறையில் தூக்கிட்டு பிணமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து,  வரதட்சணைக் கொடுமையினாலேயே தனது மகளைக் கொலை செய்திருப்பதாக விஸ்மயாவின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். அதற்கான ஆதாரமாக வாட்ஸ் ஆப் பதிவுகளையும் கொடுத்துள்ளனர். கேரள மகளிர் ஆணையமும் இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.

click me!