காதலித்து திருமணம்.. ஓயாமல் வரதட்சணை கேட்டு மாப்பிள்ளை வீட்டார் டார்ச்சர்... கதையை முடித்து கொண்ட புதுப்பெண்!

By vinoth kumar  |  First Published Nov 1, 2023, 3:28 PM IST

கர்நாடக மாநிலம் மங்களூரு தட்சிண கன்னடாவின் மாவட்டம் பன்ட்வால் சஜிபமுடாவைச் சேர்ந்தவர் பாவா. இவரது மகள் நவுசின்(22). இவருக்கு இன்ஸ்டாகிராம் வாயிலாக மங்களூரு உல்லாளை சேர்ந்த அஸ்மான் (24) என்பவரின் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 


கணவர் வீட்டார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியால் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக மாநிலம் மங்களூரு தட்சிண கன்னடாவின் மாவட்டம் பன்ட்வால் சஜிபமுடாவைச் சேர்ந்தவர் பாவா. இவரது மகள் நவுசின்(22). இவருக்கு இன்ஸ்டாகிராம் வாயிலாக மங்களூரு உல்லாளை சேர்ந்த அஸ்மான் (24) என்பவரின் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து இருவீட்டார் சம்மதத்துடன் மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. 

Tap to resize

Latest Videos

திருமணத்தின்போது நவுசின் பெற்றோர் 22 பவுன் நகை மற்றும் பணத்தை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். ஆனால், அஸ்மானுக்கு நிறைய கடன் இருந்ததால், நவுசின் வீட்டில் இருந்து வரதட்சணையாக கொடுத்த நகைகளை விற்றுள்ளார். அதன் பின்னர் கூடுதல் வரதட்சணை வாங்கி வருமாறு நவுசினுக்கு அஸ்மான் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளனர். 

இதனால் பொறுமை இழந்த நவுசின் கடந்த மாதம் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். அப்படி இருந்த போதிலும் விடாமல் வரதட்சணை டார்ச்சர் செய்ததால் மனமுடைந்த நவுசின் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை கேட்டு டார்ச்சர் செய்ததால் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!