நான் எவ்வளவு சொல்லியும் கேட்காம உங்க அம்மா சாவுக்கு போறியா.. மனைவியின் தலையில் அம்மிக்கல்லைப் போட்டு கொலை.!

Published : Oct 31, 2023, 03:41 PM ISTUpdated : Oct 31, 2023, 03:42 PM IST
 நான் எவ்வளவு சொல்லியும் கேட்காம உங்க அம்மா சாவுக்கு போறியா.. மனைவியின் தலையில் அம்மிக்கல்லைப் போட்டு கொலை.!

சுருக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்துள்ள நாகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ராமர் (55). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சின்னப்பிள்ளை(44). இவர்களுக்கு கார்த்திக், ரமேஷ் என்ற மகன்களும், அம்சவள்ளி என்ற மகளும் உள்ளனர்.

தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் தலையில் கணவன் அம்மி கல்லை போட்டு கொலை செய்த பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்துள்ள நாகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ராமர் (55). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சின்னப்பிள்ளை(44). இவர்களுக்கு கார்த்திக், ரமேஷ் என்ற மகன்களும், அம்சவள்ளி என்ற மகளும் உள்ளனர். பிள்ளைகளுக்கு திருமணமான நிலையில் இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக ராமர் தனது மாமியார் குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்து வந்துள்ளார்.

இதையும் படிங்க;- கண்ட இடத்தில் கை வைத்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை!பொங்கிய பெற்றோர்! சிக்கிய ஆசிரியர்!இறுதியில் நடந்தது என்ன? 

இந்நிலையில் ராமரின் மாமியார் செல்லம்மாள் கடந்த வாரம் உயிரிழந்தார். அவரது இறப்புக்கு செல்லக் கூடாது என மனைவியிடம் கண்டிப்புடன் ராமர் கூறினார். ஆனால்,  மனைவி மற்றும் மகன் கார்த்திக், மகள் அம்சவள்ளி ஆகியோரும் குடும்பத்துடன் இறுதிச்சடங்கில் பங்கேற்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ராமர் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். 

இதையும் படிங்க;-  கள்ளக்காதலுக்கு இடையூறு.. கூலிப்படையை வைத்து மனைவியை போட்டு தள்ளிய கணவர்.. சிக்கியது எப்படி?

பின்னர் இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மனைவியின் தலையில் அம்மி கல்லை போட்டுள்ளார். இதில், தலை நசுங்கி சின்னபிள்ளை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.  மனைவி உயிரிழந்ததை அடுத்து நேராக  சின்னசேலம் காவல் நிலையத்திற்கு சென்ற ராமர் தனது மனைவியைக் கொலை செய்து விட்டதாக கூறி சரணடைந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சின்னபிள்ளை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கைது செய்யப்பட்ட ராமரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

சினிமா மிஞ்சும் திகில்.. காட்டிக்கொடுத்த காலி மதுபாட்டில்கள் பார் கோடுகள்.. பெண் கொலை வழக்கில் ஓய்வு பெற்ற காவலர் கைது
அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!