ரவுடியின் மனைவியை தகாத உறவுக்கு அழைத்த திமுக பிரமுகர்..! சரமாரியாக வெட்டிப்படுகொலை..!

By Manikandan S R S  |  First Published Feb 22, 2020, 11:51 AM IST

குப்பனிடம் தகராறில் ஈடுபட்ட அவர்கள், திடீரென அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதில் படுகாயமடைந்த குப்பன் ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிருக்கு போராடினார். 


சென்னை திருவொற்றியூர் அருகே இருக்கும் காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர் சொரி குப்பன் (வயது 60). திமுக பிரமுகரான இவர் மீன் பிடிக்கும் தொழில் பார்த்து வந்துள்ளார். இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் காவல்துறையில் நிலுவையில் இருக்கின்றன. நேற்று மாலையில் காசிமேடு கடற்கரை பகுதியில் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து சீட்டு விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று வந்துள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

குப்பனிடம் தகராறில் ஈடுபட்ட அவர்கள், திடீரென அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதில் படுகாயமடைந்த குப்பன் ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிருக்கு போராடினார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் குப்பனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்லப்பட்டது. கொலை குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அதில் அட்டு ரமேஷ் (44), சம்பத் (25), ராகேஷ்(18), சந்தோஷ்(19) ஆகிய 4 பேர் கொலையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

குருமூர்த்தி வீட்டில் தாக்குதல்..! பெரியார் ஆதரவாளர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.!

இதையடுத்து தலைமறைவாக இருந்த அட்டு ரமேஷை காவலர்கள் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில்,தான் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும், அதற்கு குப்பன் இடையூறு செய்ததாகவும் கூறியிருக்கிறார். மேலும் ரமேஷின் மனைவியை குப்பன் தகாத உறவுக்கு அழைத்ததாகவும் கூறப்படுகிறது. அதன்காரணமாகவே குப்பனை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ரமேஷ் கொலை செய்திருப்பது தெரிய வந்ததுள்ளது. ரமேஷ் அளித்த தகவலின் அடிப்படையில் தலைமறைவாக இருக்கும் மேலும் 3 பேரை காவலர்கள் தேடி வருகின்றனர்.

click me!