கஞ்சாவை ஒழிக்க போராடிய திமுக கவுன்சிலர் அம்மா... வியாபாரம் செய்து மாட்டிக்கொண்ட போலீஸ்கார மகன்..!

Published : Apr 22, 2020, 05:01 PM IST
கஞ்சாவை ஒழிக்க போராடிய திமுக கவுன்சிலர் அம்மா... வியாபாரம் செய்து மாட்டிக்கொண்ட போலீஸ்கார மகன்..!

சுருக்கம்

கஞ்சாவை ஒழிக்க தி.மு.க., பெண்  கவுன்சிலர் போராட்டம் நடத்தியதும், அவரது மகனே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஊரடங்கு உத்தரவால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் குடிமகன்கள் மதுக்கிடைக்காமல் அல்லாடி வருகின்றனர். போதைக்காக மாற்று வழி தேடி அலைகின்றனர். இந்நிலையில் கஞ்சா விற்பனை சூடுபிடித்து வருவதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ருந்த காவலர் பிரவீன் கஞ்சா விற்றதால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக கஞ்சாவை ஒழிக்க வேண்டும் பகுதி திமுக ஒன்றிய கவுன்சிலரான செல்வி ஆரோக்கியமேரி சில வாரங்களுக்கு முன் சமயநல்லூர் காவல்நிலையத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினார். இப்போது அவரது மகனான காவலர் பிரவீன் கஞ்சா விற்று கைது செய்யப்பட்டிருப்பது தான் கொடுமையின் உச்சம்.  

நேற்று காவலர் பிரவீன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது தெரியவந்து,  இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்ற போது ப்ரவீன் கைது செய்யப்பட்டார்.அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 750 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ப்ரவீனிடம் நடத்திய விசாரணையில், ’மதுரை, அண்ணா நகர் காவல் நிலையத்தில் பணியாற்றிய போது ஏடிஎம் மையத்திற்கு வந்தவர்களிடம் பணம் எடுத்து தருவதாக கூறி மோசடி செய்து பணத்தை அபகரித்த வழக்கில் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்தது. ப்ரவீன் சமயநல்லூர் தி.மு.க., இளைஞரணி நிர்வாகியாக இருப்பதும் தெரியவந்தது.

கஞ்சாவை ஒழிக்க தி.மு.க., பெண்  கவுன்சிலர் போராட்டம் நடத்தியதும், அவரது மகனே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் திமுகவில் இளைஞரணி பொறுப்பில் உள்ளவர் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

PREV
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி