கேங் லீடர்.... பண்ணை வீட்டுப் பையன்... கந்துவட்டி பிஸினஸ்... அப்பா அரசியல் புள்ளி... திருநாவுக்கரசின் பின்னணி!!

Published : Mar 14, 2019, 01:27 PM ISTUpdated : Mar 14, 2019, 01:38 PM IST
கேங் லீடர்.... பண்ணை வீட்டுப் பையன்... கந்துவட்டி பிஸினஸ்...  அப்பா அரசியல் புள்ளி... திருநாவுக்கரசின் பின்னணி!!

சுருக்கம்

கல்லூரியில் வலம் வந்த காதல் மன்னன், கேங் லீடர், பண்ணை வீட்டுப் பையன், கந்துவட்டி பிஸினஸ், அப்பா த.மா.கா.காரர்... திருநாவுக்கரசின் தாருமாறு பின்னணி.

பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலையத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரியிடம் ஒருவர் பிரபல வார புலனாய்வு இதழுக்கு அளித்த பேட்டியில் பல திடுக் தகவல் தெரிவித்திருக்கிறார்.

அதில், நாங்கள் நடத்திய விசாரணையில் மொத்தம் 1100 வீடியோக்கள். ஏராளமான போட்டோக்கள் கைப்பற்றியுள்ளோம். எல்லாம் கிராமத்துலயிருந்து இங்கே பொள்ளாச்சி டவுனுக்கு படிக்க வர்ற பொண்ணுக. கடைகள்ல வேலை செய்யற பொண்ணுகளையெல்லாம் காதல்ங்கற பேரில், நம்பவச்சு கோட்டூர்புரம் பகுதியில இருக்கற சின்னப்பம்பாளையம் பண்ணை வீட்டுக்கு கூட்டிட்டுப் போயி பத்துக்கும் மேற்பட்ட கொடூர கும்பல் பண்ணுன அக்கிரமம்தான் வீடியோவா ரிலீசானது.. 

இந்த மிருக கும்பலுக்கு தலைவன்தான் திருநாவுக்கரசு. 27 வயதான இவர் எம்பிஏ படித்துள்ளார். இவருக்கு வசதிக்கு குறைவில்லை. வட்டிக்கு விடும் தொழில் செய்து வருகிறார். சொகுசு கார், பண்ணை வீடு என எதற்கும் பஞ்சமில்லாதவர். 

பண்ணை வீட்டுப் பையன் திருநாவுக்கரசுதான் கேங் லீடர். கந்துவட்டி பிஸினஸ். அவன் அப்பா த.மா.கா.காரர். திருநாவுக்கரசு கூடவே சுத்துற சுபாகர், பிரேம், கெரோன், பாபு, செந்தில், சதீஷ், பைக் பாபு, வசந்தகுமார், ஆச்சிபட்டி மணிகண்டன் இவனுக எல்லாருமே ஸ்கூல், காலேஜ்னு முன்பு நின்றுகொண்டு. கண்ணில் சிக்கும் அழகான பொண்ணுககிட்டபோய் பேசி நம்பர் வாங்கிவிட்டு. அப்புறம், அந்த நம்பர்கள்ல பேசுறது திருநாவுக்கரசுதான், பேசியே மயக்கி அந்த பெண்ணிடம் நம்பர் வாங்கியவர்களிடம் திரும்ப போனை கொடுத்துருவான்.

அடுத்தநாள் அவனவன் ரெடி பண்ணின பொண்ணுகளை சின்னப்பம்பாளைய பண்ணை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருவானுக. அங்கே காதல் மயக்கத்தில் உள்ள பெண்களை அரைகுறை உடையில் ரகசியமா வீடியோ எடுத்துருவான் திருநாவுக்கரசு. அப்புறம் அவனும் அவனோட கேங்க்கும் உள்ளே நுழைந்து பொண்ணுங்களை கதறக் கதற கற்பழித்துவிடுவதும், வீடியோ எடுத்திடுத்தும். அதை வெளியிட்டுடுவோம்னு மிரட்டி மிரட்டியே, நினைச்சப்பவெல்லாம் பண்ணை வீட்டுக்கு கூட்டிட்டு வரவழைத்துள்ளனர்.  அவனும் இந்த திருநாவுக்கரசு, ரிஷ்வந்த்தோடு சேர்ந்து, பொண்ணுகளை நாசமாக்கி, அரசியல்  மேல்மட்ட புள்ளிகளுக்கு  சப்ளை செய்துள்ளது விசாரணையில் வெளியாகியுள்ளது.

மேலும், ஆடம்பரமாக வாழ்ந்து வந்த இவர் கல்லூரியிலும் பல பெண்களுடன் பழகி அவர்களையும் சீரழித்துள்ளதாக தெரியவந்துள்ளது. பண்ணையார் குடும்பமாக இவன், படிக்கும் போதே காதல் மன்னனாக வலம் வந்தவன். செம்ம ஸ்டைலாக இங்கிலீஷ் பேசுவானாம். பார்ப்பதற்கு பாலிவுட் ஹீரோ லுக்கில் ஸ்டைலாக வலம் வரும் இவன், இளம்பெண்களை மயக்கி காதல் வலையில் சிக்க வைத்துள்ளான். 

பேஸ்புக்கில் பெண்கள் பெயரில் ஃபேக் ஐடி  மூலம் இளம் பெண்களுக்கு பிரெண்ட் ரிக்வஸ்ட் கொடுத்து  நட்பாகி, மெல்ல மெல்ல காதல் வசப்படுத்துவதும். நண்பர்களில் பெண் யாருக்கு சிக்கினாலும்   திருநாவுக்கரசுதான் மயங்க மயங்க பேசி பேசி மயக்குவானாம்.

PREV
click me!

Recommended Stories

அட பாவிங்களா... ரூ.3 கோடி பணம்.. அரசு வேலைக்காக பாம்பை ஏவி தந்தை கொ**.. மகன்களின் சதி அம்பலமானது எப்படி?
காலி பாட்டிலுக்காக 5 ரூபாய் தகராறு.. பட்டப்பகலில் 3 குழந்தைகளின் தந்தை ஓட ஓட விரட்டி கொ**..! தூத்துக்குடியில் பயங்கரம்