லிஃப்ட் கொடுத்தது ஒரு குத்தமாங்க? செல்ஃபி எடுக்குறேனு சொல்லிட்டு பைக்கை ஆட்டையே போட்ட இளைஞர்கள்.!

By vinoth kumarFirst Published Jun 4, 2022, 11:34 AM IST
Highlights

சென்னையில் டான்சரிடம் லிஃப்ட் கேட்டு பைக்கில் சென்ற திருடர்கள் பைக் அழகாக உள்ளது. செல்பி எடுக்க வேண்டும் என கூறி அதனை திருடிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் டான்சரிடம் லிஃப்ட் கேட்டு பைக்கில் சென்ற திருடர்கள் பைக் அழகாக உள்ளது. செல்பி எடுக்க வேண்டும் என கூறி அதனை திருடிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சென்னை கோடம்பாக்கம் ஆண்டவர் நகரை சேர்ந்தவர் சரண்ராஜ் (24). சினிமா டான்சரான இவர் கடந்த 19ம் தேதி தனது விலை உயர்ந்த பைக்கில் மெரினா பீச்சில் டான்ஸ் பயிற்சி மேற்கொண்டு வந்தார். அப்போது அந்த இடத்திற்கு வந்த இரண்டு பேர் தனது செல்போனில் பேலன்ஸ் இல்லை.  நண்பரிடம் பேச வேண்டும் செல்போன் ஒரு நிமிடம் தருமாறு சரணிடம் கேட்டுள்ளனர். பின்னர், பேசிவிட்டு செல்போனை கொடுத்தனர்.

பயிற்சி முடிந்த பிறகு சரண் பைக்கில் வீட்டிற்கு கிளம்பும் போது அதே நபர்கள் எழும்பூர் இறக்கி விடுமாறு கேட்டுள்ளனர். எழும்பூர் காந்தி இர்வின் பாலத்தில் இறக்கிவிட்டுள்ளார். அப்போது இருசக்கர வாகனம் நன்றாக இருப்பதாகவும், ஒரு செல்பி எடுக்க  வேண்டும் என கூறியதை நம்பி சரண், ராஜூவும் போஸ் கொடுத்துள்ளனர். லிப்ட் கேட்டவர்களில் ஒருவர் பைக்கில் அமர்ந்து போஸ் கொடுத்தபோது திடீரென சரண்ராஜை கீழே தள்ளி விட்டு பைக்குடன் தப்பித்து சென்றனர்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சரண் உடனடியாக எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய போது, பழைய குற்றவாளி புளியந்தோப்பை சேர்ந்த சசிகுமார்(22) திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து, அவரை கைது செய்து பைக்கை பறிமுதல் செய்தனர். 

click me!