கோவிலுக்குள் வைத்து பூசாரி மகளை கற்பழித்த சிறுவன்... கட்டிவைத்து கொலைவெறித் தாக்குதல்

Published : Jun 06, 2019, 06:11 PM ISTUpdated : Jun 09, 2019, 11:26 AM IST
கோவிலுக்குள் வைத்து பூசாரி மகளை கற்பழித்த சிறுவன்...   கட்டிவைத்து கொலைவெறித் தாக்குதல்

சுருக்கம்

சமூகவலைத்தளங்களில் ஒரு சிறுவனின் கை கால்களை கட்டிப்போட்டு 4 இளைஞர்கள் வெறித்தனமாக அடிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சிறுவன் கோவிலுக்குள் நுழைய முயன்றதால் தாக்கப்பட்டதாக கண்டனக்குரல் எழுப்பிய நிலையில், கோவிலுக்குள் சிறுமியை பலாத்காரம் செய்ததாக அந்த சிறுவனை தாக்கியுள்ளனர்.   

சமூகவலைத்தள பக்கங்களான வாட்ஸ்அப், ட்விட்டர், ஃபேஸ்புக் என அனைத்திலும் சிறுவனை கட்டி வைத்து தாக்கும் வீடியோ வைரலானது. அவன் கதற கதற கனமான குச்சி ஆனால் அந்த சிறுவன் அடிவாங்கக் காரணம் என்ன என விசாரித்ததில் திடுக்கிடவைக்கும் சம்பவம் நடந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில், கடந்த, சனிக்கிழமையன்று கோவிலுக்குள் சென்ற சிறுவன் அங்கிருந்த அந்த கோயில் பூசாரியின் மக்களை கோவிலுக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அப்போது அங்கு வந்த பூசாரி நேரில் பார்த்ததால், சத்தம் போட்டதும், சிறுவன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றபோது, அந்த  சிறுவனை பிடித்து கட்டி வைத்து அடித்துள்ளனர். அப்போது அதை சிலர் முகநூலில் லைவ் செய்தும், சிலர் வீடியோ எடுத்தும் சமூகவலைத்தளங்களில் பரப்பி விட்டனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், கிராம மக்களும் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த சிறுவனை தாக்கிய அந்த நான்கு போரையும் போலீசார் கைது செய்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை.. தட்டிக்கேட்ட தந்தைக்கு மண்டை உடைப்பு
வழக்கறிஞர் சொல்லி எஸ்.ஐ. மடக்கி கதறவிட்ட அலமேலு.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி