ஹெலிகாப்டரில் சென்று கோயில்களில் தரிசனம்!நூதன முறையில் ஏமாற்றும் மோசடி கும்பல்-அலெட்ர்ட் செய்யும் சைபர் கிரைம்

By Ajmal Khan  |  First Published Apr 27, 2023, 3:41 PM IST

பிரசித்திபெற்ற வழிபாட்டு தலங்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்ல இணைய வழி முன்பதிவு செய்யும் நபர்களிடம் மோசடி செய்து ஒரு கும்பல் பணம் பறிப்பதாகவும், எனவே மோசடி கும்பலிடம் கவனமாக இருக்க வேண்டுமென தமிழ்நாடு சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. 


சமூக வலைதள மோசடி

சமூக வலைதளத்தின் வளர்ச்சி காரணமாக ஒரு பக்கள் நன்மைகள் இருந்தால் மறு பக்கம் தீய செயல்களும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக முகநூலில் உறவினர், நண்பர்கள் போல போலியான பெயரை பதிவு செய்து பணம் கேட்டு மெசேஜ் அனுப்பவதும், ஓடிபி அனுப்பி ஏமாற்றும் கும்பல் தற்போது தெய்வத்தின் பெயரை கூறி ஏமாற்றி வருகிறது.  இந்த மோசடி தொடர்பாக சைபர் குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற வழிப்பாட்டு தலங்களுக்கு ஹெலிகாப்டரில் அழைத்து செல்வதாக கூறி போலி இணையதளங்கள் உருவாக்கப்பட்டு பக்தர்கள் ஏமாற்றப்படுவதாக புகார்கள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.. வழிபாட்டு தலங்களுக்கு செல்ல விரும்பும் பக்தர்களைக் குறி வைத்து வெப்சைட் தொடங்கி போலி இணையவாசிகள் இந்த மோசடியை செய்வதாகவும் கூறப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

ஹெலிகாப்டர் சுற்றுலா

மோசடி செய்பவர்கள் தங்களை ஹெலிகாப்டர் புக்கிங் நிறுவனத்தின் நிர்வாகிகள் போல் காட்டிக்கொண்டு, முன்பதிவைத் தொடர பக்தர்கள் பணம் செலுத்தும் விவரங்களைப் பற்றி விவாதிக்கின்றனர். மேலும், மோசடி செய்பவர்கள் இந்திய தொலைபேசி எண்களைப் பயன்படுத்ததி வருவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் சட்டப்பூர்வ நிறுவனமாகத் தோன்றுவதற்காக புனித ஆலயங்கள் அல்லது தெய்வத்தின் படங்களைக் தங்கள் வெப்சைட்டில் இடம்பெறவைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இறுதியாக, மோசடி செய்பவர்கள் பக்தர்களிடம் யூபிஐ மூலம் பணம் செலுத்துமாறு கேட்கிறார்கள் மற்றும் பணம் செலுத்தியவுடன் போலி  டிக்கெட்டுகள் பக்தர்களுக்கு அனுப்புகின்றனர். இதற்குப் பிறகு, மோசடி செய்பவர்கள் தங்கள் தொலைபேசி எண்களை அணைத்துவிட்டு அல்லது தூக்கி எறிந்துவிடுகிறார்கள், இதனையடுத்து மோசடி கும்பலை பக்தர்கள் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. 

சைபர் கிரைம் எச்சரிக்கை

எனவே இந்த மோசடி கும்பலிடம் இருந்து தப்பிக்க எப்போதும் நம்பகமான இணையதளங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு முன் நிறுவனத்தின் சட்டபூர்வமான தன்மையை சரிபார்க்கவும். சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள்/செய்திகளின் இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மோசடி நபர்கள் குறித்துசைபர் க்ரைம்க்கு தகவல் தெரிக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். 

இதையும் படியுங்கள்

சென்னையில் பயங்கரம்.. அதிகாலை டீ குடிக்க வந்த விசிக பிரமுகர் வெட்டி படுகொலை.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்.!

click me!