நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே பழங்குடியின மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலை செய்த நபரை கைது செய்து காவல் துறையினர் ரகசிய இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி பைக்காரா அருகே உள்ள தோடர் பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது மாணவி. இவர் ஊட்டியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது மாணவிக்கு இறுதித்தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் காலை மாணவி வழக்கம் போல பள்ளிக்கு சென் றார்.
ஆனால் மாலை வெகுநேரமாகியும் மாணவி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவரை பெற்றோர் தேடி வந்தனர். இந்நிலையில் மாயமான மாணவி அங்கர்போர்டு அருகே உள்ள புதருக்குள் பலத்த காயங்களுடன் அலங்கோலமான நிலையில் பிணமாக கிடந்தார்.
இது தொடர்பாக பைக்காரா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட னர். மாணவி உடல் அருகே கார் ஒன்று நின்று கொண்டி ருந்தது. அந்த காரில் மாணவி கடத்தப்பட்டு கற்பழித்து கொலை செய்யப் பட்டது விசாரணையில் தெரியவந்தது. மாணவியை கற்பழித்து கொன்றது யார்? இதில் ஒரு நபர் ஈடுபட்டரா? அல்லது கும்பலாக ஈடுபட்டனரா என்பது குறித்து விசாரணையை முடுக்கிவிட்டனர்.
திருச்சி பெரியகடை வீதியில் 1 கிலோ தங்கம், கால் கிலோ வெள்ளி கொள்ளை; வியாபாரிகள் கலக்கம்
முதற்கட்ட விசாரணையில், மாணவியை கடத்திச் சென்ற கார், கக்கோடுமந்து என்ற இடத்தைச் சேர்ந்த ரஜ்னேஷ் குட்டன் (வயது25) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. மேலும் இவர் தான் மாணவியை காரில் கடத்தி சென்று கற்பழித்து கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போக்சோ, கடத்தல், கொலை உள்ளிட்ட பிரிவுகளில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை தேடினர். ஆனால் அவர் தலைமறைவாகி இருந்தார்.
கவனக்குறைவாக வாகனத்தை திருப்பிய நபரால் சாலையில் தூக்கி வீசப்பட்ட 2 பெண்கள்
தலைமறைவாக இருந்த ரஜ்னேஷ் குட்டனை பிடிக்க ஆய்வாளர்கள் அருள், சுசீலா ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வாலிபரை தேடி வந்தனர். இந்தநிலையில் நஞ்சநாடு கிராம நிர்வாக அதிகாரி பிரியா முன்னிலையில் ரஜ்னேஷ் குட்டன் சரண் அடைந்தார். அவரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.
பின்னர் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். மாணவி கொலையில் இவரை தவிர வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் அவரிடம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.