கெத்தாக பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய ரவுடி.. ஹேர் ஸ்டைலை மாற்றியும் போலீசில் சிக்கியது எப்படி?

Published : May 19, 2022, 11:34 AM ISTUpdated : May 19, 2022, 11:42 AM IST
கெத்தாக பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய ரவுடி.. ஹேர் ஸ்டைலை மாற்றியும் போலீசில் சிக்கியது எப்படி?

சுருக்கம்

சென்னையில் பட்டா கத்தி மூலம் கேக் வெட்டி இளைஞர்கள் சிலர் பிறந்தநாள் கொண்டாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பான தகவலின் அடிப்படையில் சென்னை காவல்துறை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் வீடியோவை வைத்து சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் யார் யார் என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

சென்னையில் பட்டாக்கத்தியை கொண்டு கேக் வெட்டிய பரட்டை தலை ரவுடி ஒருவர் போலீசுக்கு பயந்து தலைமுடியை வெட்டிக் கொண்டு சுற்றிதிரிந்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

சென்னையில் பட்டா கத்தி மூலம் கேக் வெட்டி இளைஞர்கள் சிலர் பிறந்தநாள் கொண்டாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பான தகவலின் அடிப்படையில் சென்னை காவல்துறை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் வீடியோவை வைத்து சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் யார் யார் என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் திருமங்கலத்தை சேர்ந்த பழைய குற்றவாளியான ஆனஸ்ட்ராஜ் என்பவர் தனது கூட்டாளிகளுடன்  கத்தியால் கேக் வெட்டியது தெரியவந்துள்ளது. இந்நிலையில், பட்டாக்கத்தியுடன் கேக் வெட்டிய ஆனஸ்ட்ராஜ் மற்றும் அவரது கூட்டாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இதனிடையே போலீசார் தேடுவதை அறிந்ததும் பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர் தனது தலைமுடியை வித்தியாசமாக வெட்டிக்கொண்டு உலாவி வந்துள்ளார். 

அப்படியிருந்தும் போலீசார், சென்னை பழைய திருமங்கலம் பகுதியில் உள்ள வீட்டுக்கு சென்று விசாரித்து அங்கிருந்த ஆனஸ்ட்ராஜ்(23) என்பவரை கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் இருந்து பட்டாகத்தியை பறிமுதல் செய்து பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!