காதலி - மனைவியை ஒரே மேடையில் திருமணம் செய்து கொண்ட பாதுகாப்பு படை வீரர்..!

Published : May 21, 2019, 05:23 PM IST
காதலி - மனைவியை ஒரே மேடையில் திருமணம் செய்து கொண்ட பாதுகாப்பு படை வீரர்..!

சுருக்கம்

தனது காதலியையும், மனைவியையும் ஒரே மேடையில் வைத்து சிஆர்பிஎஃப் வீரர் திருமணம் செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   


தனது காதலியையும், மனைவியையும் ஒரே மேடையில் வைத்து சிஆர்பிஎஃப் வீரர் திருமணம் செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சட்டீஸ்கர் மாநிலம் ஜாஷ்பூர் மாவட்டத்தை சேர்ந்த பாஹ்தோல் கிராமத்தை சேர்ந்தவர் அணில் பைக்காரா, இவர் சிஆர்பிஎஃப் வீரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் குழந்தைகள் இல்லை. இந்நிலையில் விடுமுறைக்காக அணில் பைக்காரா சொந்த ஊருக்கு திரும்பும்போதெல்லாம் அவரது வீட்டின் அருகே உள்ள அங்கன்வாடியில் பணியாற்றி வரும் பெண் ஒருவருடன் நெருங்கி பழகியுள்ளார். தன் மனைவியை விட அந்த பெண்ணுடன் அதிக நேரத்தை செலவளித்துள்ளார்.

 

இந்நிலையில் தனது மனைவி மூலம் குழந்தை பிறக்காததால் அணில் பைக்காரா அங்கன்வாடி காதலியை திருமணம் செய்ய முடிவு செய்தார். இதற்கு அவரது முதல் மனைவியும் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவரோ முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் தனது காதலியையும், மனைவியையும் ஒரே மேடையில் வைத்து இருவரையும் திருமணம் செய்தார். அதாவது மனைவியை இரண்டாவது முறையாக திருமணம் செய்தார். 

இது குறித்து சிஆர்பிஎஃப் அதிகாரி ஒருவர் கூறுகையில், "சட்டப்படி முதல் மனைவி இருக்கும்போது அவரை சட்டப்படி விவாகரத்து செய்யாமல் இரண்டாவதாக திருமணம் செய்வது தவறு. அரசு ஊழியர்கள் இவ்வாறு செய்ய அனுமதியில்லை. அவர் எந்த ஜாதி, மதம் என யாராக இருந்தாலும் தனக்கு திருமணமான பின் தனது துணை இருக்கும்போது வேறு ஒருவரை மணக்க முடியாது. அவ்வாறு செய்தால் அவர்களின் வேலைக்கு பாதிப்பு ஏற்படும். இந்த சம்பவம் குறித்து சிஆர்பிஎஃப் விசாரணை நடத்தும்" எனக் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

காலி பாட்டிலுக்காக 5 ரூபாய் தகராறு.. பட்டப்பகலில் 3 குழந்தைகளின் தந்தை ஓட ஓட விரட்டி கொ**..! தூத்துக்குடியில் பயங்கரம்
அடச்சீ.. இப்படி ஒரு தாயா? 31 வயது கள்ளக்காதலனுக்கு 18 வயது மகளை திருமணம் செய்து வைத்த கொடூரம்