அடுத்த வீட்டு பெண்களை நாசப்படுத்த நினைத்த நிர்மலா தேவிக்கு மேலும் சிக்கல்!! 2-வது குற்றப்பத்திரிகை...

Published : Sep 08, 2018, 03:41 PM ISTUpdated : Sep 09, 2018, 08:30 PM IST
அடுத்த வீட்டு பெண்களை நாசப்படுத்த நினைத்த நிர்மலா தேவிக்கு மேலும் சிக்கல்!!  2-வது குற்றப்பத்திரிகை...

சுருக்கம்

தாக்கல் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் மீது 2-வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் மீது 2-வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கப்பட்டதாக எழுந்த புகார் அடிப்படையில் கைது செய்யப்பட்டு மதுரைமத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வழக்கில் 200 பக்கங்கள் கொண்ட 2-வது மற்றும் இறுதி குற்றப்பத்திரிகை சிபிசிஐடி டிஎஸ்பி கருப்பையா தலைமையிலான போலீசார், நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அந்த குற்றப்பத்திரிகையில் நிர்மலா தேவியிடம் எடுக்கப்பட்ட குரல் மாதிரி சோதனை அறிக்கைகள், செல்போன் உரையாடல்கள் உள்ளிட்ட விசாரணை ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

Salem Crime: இரண்டு குழந்தைகளை பெற்றும் அடங்காத 23 வயது லலிதா.. அலறிய சேலம்.. நடந்தது என்ன?
Chennai Crime: ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! கணவனை துண்டு துண்டாக வெட்டி கொன்றது ஏன்? சிக்கிய மனைவி பகீர்