கொரோனா பாதிப்பு.. 3இஎம் ஐ தவணை தள்ளி வைப்பு ..ஆர்பிஐ உத்தரவு. அக்கவுண்டை முடக்கிய வங்கி மீது போலீசில் புகார்.

By Thiraviaraj RMFirst Published Apr 8, 2020, 12:36 AM IST
Highlights

ஆர்.பி.ஐ உத்தரவிட்டும் வங்கி கணக்கில் பணம் இல்லாததால் வங்கி கணக்கை முடக்கிய நிதிநிறுவனத்தின் மீது பாண்டிச்சேரி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 

T.Balamurukan
ஆர்.பி.ஐ உத்தரவிட்டும் வங்கி கணக்கில் பணம் இல்லாததால் வங்கி கணக்கை முடக்கிய நிதிநிறுவனத்தின் மீது பாண்டிச்சேரி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொரோனா தொற்று பாதிப்பால் ஊரடங்கு பிறப்பித்துள்ளது.இதனால் அனைவரும் வீட்டில் முடங்கி கிடக்கிறார்கள். வருமானம் இன்றி இருப்பதால் வங்கிகளில்,தனியார் வங்கிகள், பைனாஸ் கம்பெனிகளில் வாங்கிய கடன்களை கட்ட 3 இஎம்ஐ தவணை கட்ட தள்ளிவைக்க ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இந்த நிலையில் , வங்கிகள் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இஎம்ஐ பிடித்திருந்தாலோ, வங்கி கணக்கை முடக்கியிருந்தாலோ அவரவர் இருக்கும் இடத்திற்கு அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்று ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. 


அதற்கு சாட்சியாக பாண்டிச்சேரியில்,ஜேக்கப் என்பவர் பஜாஜ் பைனான்சில் வாங்கிய கடனுக்கு,அரசு வழங்கிய 3மாத தவணை தள்ளி வைப்பு உத்தரவை மதிக்காமல், கணக்கில் பணம் இல்லையென்று சொல்லி வங்கி கணக்கை பிளாக் செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு அதற்கு ஒப்புகைச் சீட்டும் பெறப்பட்டிருக்கிறது.
இந்த தகவல் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

click me!