படிக்கிற வயசில் காதல்... கர்ப்பம்... உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த அக்காவை கொலை செய்து நாடகமாடிய தங்கை..!

Published : Apr 07, 2020, 03:29 PM ISTUpdated : Apr 07, 2020, 03:33 PM IST
படிக்கிற வயசில் காதல்...  கர்ப்பம்... உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த அக்காவை கொலை செய்து நாடகமாடிய தங்கை..!

சுருக்கம்

 கடந்த 24ம் தேதி வீட்டில் தனிமையில் இருந்த இருவருக்குமிடையே மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பக்கத்து தெருவில் வசிக்கும் காதலன் ராகுலுக்கு போன் செய்து வீட்டுக்கு வரவழைத்துள்ளார். இருவரும் சேர்ந்து மோனிஷாவை தாக்கி அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர், மோனிஷா தற்கொலை செய்து கொண்டது போல் சித்தரிக்க, பிளேடால் அவரது கையை அறுத்துள்ளனர்.

நாமக்கல் அருகே காதலுக்கு இடையூறாக இருந்த சகோதரியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு நாடகம் ஆடிய தங்கை மற்றும் அவரது காதலனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 

நாமக்கல் மாவட்டம் அருகே, கொசவம்பட்டி தேவேந்திரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கரன், வத்சலா என்ற தம்பதி. இவர்களுக்கு மணிகண்டன் என்ற மகனும், இரண்டு மகளும் உள்ளனர். மூத்த மகள்  தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாண் ஆண்டு படித்து வருகிறார். இளையமகள் அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், ஊரடங்கு  அமலுக்கு வந்த கடந்த 24ம் தேதி, வீட்டில் தனியாக இருந்த மோனிஷா கை அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கி நிலையில் கிடந்தார். இதனையடுத்து, மகளை பார்த்ததும் அலறியடித்துக் கொண்ட பெற்றோர் உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உங்கள் மகள் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுதொடர்பாக போலீசாரும் மோனிஷா தற்கொலை செய்து கொண்டதாக முடிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதனிடையே, மோனிஷாவின் அண்ணன் மணிகண்டன் தங்கையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து, பிரேத பரிசோதனை அறிக்கையிலும் கழுத்தை நெரித்ததால் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. பின்னர், தற்கொலை வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் தீவிரமாக ஈடுபட்டனர். 

மோனிஷாவின் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்திய போது சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவன் ராகுல் என்பவன் தனது வீட்டின் மாடிப் பகுதியில் இருந்து இறங்கி ஓடியதாக மோனிஷாவின் தாய் கூறினார். இதனையடுத்து, ராகுலை பிடித்து போலீசார் அவர்களுக்கே உரித்தான பாணியில் விசாரணை நடத்தினர். அதில், ராகுல் கொடுத்த தகவலின் பேரில் அவரது மோனிஷாவின் தங்கையிடம் விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. அதில், மோனிஷாவின் பெற்றோர் இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். கடந்த 3 ஆண்டாக அண்ணன் உறவு முறை கொண்ட ராகுலுடன், மோனிஷாவின் தங்கை நெருங்கி பழகி காதலித்து வந்துள்ளார். இது இரண்டு குடும்பத்தினருக்கும் பிடிக்கவில்லை. இதை மோனிஷா மற்றும் பெற்றோர் கண்டித்துள்ளனர்.

ஆனால், மோனிஷாவின் தங்கை இதனை கேட்கவில்லை. இதனால், கடந்த ஒரு ஆண்டாக குடும்பத்தினர் யாரும் அவரிடம் பேசாமல், தனிமையில் ஒதுக்கி வைத்துள்ளனர். குடும்பத்தினர் தன்னை வெறுக்க, அக்காதான் காரணம் என நினைத்து, அக்காவை கொலை செய்ய முடிவு செய்தார். இந்நிலையில், கடந்த 24ம் தேதி வீட்டில் தனிமையில் இருந்த இருவருக்குமிடையே மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, பக்கத்து தெருவில் வசிக்கும் காதலன் ராகுலுக்கு போன் செய்து வீட்டுக்கு வரவழைத்துள்ளார். இருவரும் சேர்ந்து மோனிஷாவை தாக்கி அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர், மோனிஷா தற்கொலை செய்து கொண்டது போல் சித்தரிக்க, பிளேடால் அவரது கையை அறுத்துள்ளனர். ரத்தம் வெளியேறியதும், அவரது காதலன் அங்கிருந்து தப்பியோடி விட்டார் என்பது விசாரணையில் தெரியவந்தது.  இதனையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி