கூட்டுறவு வங்கியில் வைத்து பெண் ஊழியர் பலாத்காரம்.? தலைமறைவாக இருந்த காங் கவுன்சிலர் கைது..

By Ezhilarasan BabuFirst Published Aug 10, 2022, 2:28 PM IST
Highlights

கூட்டுறவு வங்கி ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கண்ணூர் மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் தமிழக- ஆந்திர எல்லையில் தலைமறைவாக இருந்த கவுன்சிலர் டி.வி கிருஷ்ணகுமாரை எடக்காடு  தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கூட்டுறவு வங்கி ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கண்ணூர் மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் தமிழக- ஆந்திர எல்லையில் தலைமறைவாக இருந்த கவுன்சிலர் டி.வி கிருஷ்ணகுமாரை எடக்காடு  தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு அரசும் காவல்துறையும் எத்தனை நடவடிக்கைகள் எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை, சமூகத்தில் முன்மாதிரியாக வாழ வேண்டிய அரசியல் புள்ளிகளே பல நேரங்களில் காம களியாட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

அது போன்ற ஒரு சம்பவம் கேரள மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. கண்ணூர் மாநகராட்சியில் கீழுன்னா வார்டு கவுன்சிலராக இருந்து ஒருபவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பி வி கிருஷ்ணகுமார் (52)  இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கி ஒன்று இயங்கிவருகிறது.அதில் பணியாற்றிய பெண்  ஊழியர் காங்கிரஸ் கவுன்சிலர் கிருஷ்ணகுமார் மீது கடந்த ஜூலை 20 ஆம் தேதி காவல் நிலையத்தில் பாலியல் புகார் ஒன்று கூறினார்.

இதையும் படியுங்கள்: காதலிக்க மறுப்பு.. சிறுமி குளிப்பதை வளைச்சு வளைச்சு வீடியோ.. அண்ணனுக்கு அனுப்பிய வக்கிர புத்தி இளைஞர்.!

அந்த புகாரில், ஜூலை 15ஆம் தேதி நான் வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது வங்கி செயலாளரும் மற்றும் ஊழியர்களும் மதிய உணவுக்காக வெளியே சென்றுவிட்டனர், அந்நேரம் பார்த்து வங்கிக்குள் மதியம் 1 மணி அளவில் வந்த  கவுன்சிலர் கிருஷ்ணகுமார் தன்னை வலுக்கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் இது குறித்து எனது கணவருக்கு தெரிவித்தேன், பின்னர் வங்கி செயலாளருக்கும் தகவல் கூறினேன்,எனவே தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்திய  கவுன்சிலர் கிருஷ்ணகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் கூறியிருந்தார்.

இதையும் படியுங்கள்: விழுப்புரத்தில் பயங்கரம்.. திமுக பொதுக்குழு உறுப்பினர் ஓட ஓட விரட்டி படுகொலை.. பதற்றம்.. போலீஸ் குவிப்பு.!

இதைதொடர்ந்து கேரளாவில் உள்ள மகளிர் அமைப்பினர் கிருஷ்ணகுமாரை கைது செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர், மேயர் மோகனன் கிருஷ்ண குமாரை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் என்றும் குற்றச் சாட்டு வைத்தனர். இந்நிலையில் போலீசார் அந்த புகாரை பெற்று வழக்கு பதிவு செய்து விசாரித்தனர் அதற்குள் கிருஷ்ணகுமார் கைதுக்கு பயந்து தலைமறைவாகி விட்டார்.

இதனைத் தொடர்ந்து எடக்காடு  தனிப்படை போலீசார் தமிழகம் ஆந்திர எல்லையான திருப்பதியில் பதுங்கியிருந்த கிருஷ்ண குமாரை கைது செய்தனர். முன்னதாக தலைமறைவாக இருந்த கிருஷ்ணகுமார் தலச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது ஜாமீன் மனு ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில்தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமன்றி கிருஷ்ணகுமார் எடக்காடு தொகுதி காங்கிரஸ் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!