பள்ளி மாணவியை தனியாக அறைக்கு அழைத்துச் சென்று அந்தரங்க உறுப்பில் கை வைத்து பள்ளி முதல்வர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வந்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பள்ளி மாணவியை தனியாக அறைக்கு அழைத்துச் சென்று அந்தரங்க உறுப்பில் கை வைத்து பள்ளி முதல்வர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வந்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பள்ளி முதல்வரின் காம லீலைகள் சகிக்கமுடியாத பள்ளிக்கூட ஊழியர்கள் கொடுத்த புகாரின் பேரில் இச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்லப்படுவது உண்டு. கடவுளை விட ஒரு படி மேலே வைத்து பார்க்கப்படும் ஒரு உன்னதமான பணி ஆசிரியர் பணி, மாணவர்களுக்கு கல்வி போதித்து அறியாமை என்னும் இருள் நீக்கி அவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க வேண்டியவர்கள் ஆசிரியர்கள்,
ஆனால் அப்படிப்பட்ட ஆசிரியர்களே சில நேரங்களில் காம லீலைகளில் ஈடுபட்டு பள்ளி மாணவிகளை நரகத்திற்கு தள்ளும் கொடூரங்கள் பரவலாக அதிகரித்து வருகிறது. மாணவிகளின் செல்போன் எண்களை வாங்கி வைத்துக்கொண்டு அவர்களுக்கு போன் செய்து ஆபாசமாக பேசுவது, வக்கிரமாக குறுஞ்செய்திகள் அனுப்புவது, நிர்வாணமாக வீடியோ எடுத்து அனுப்பச் சொல்லி நிர்பந்திப்பது என பலப்பல கேவலமான வேலைகளில் சில ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த தந்தை.. நேரில் பார்த்த மகன்.. வெறியில் என்ன செய்தார் தெரியுமா?
இன்னும் சில நேரங்களில் ஆசிரியர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி பள்ளி மாணவிகளை தொடக்கூடாத இடங்களில் தொட்டு பாலியல் இச்சையைத் தீர்த்துக் கொள்வது, வாய்ப்புக் கிடைத்தால் அவர்களை பாலியல் பலாத்காரம் செய்வது போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஏதோ ஒரு வழியில் வெளிச்சத்திற்கு வரும்போது அது பூதாகாரமாக வெடிக்கிறது, பொதுவாக பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு பள்ளிக்கூடம், கோவில், அலுவலகம், காவல் நிலையம் என எந்த இடத்திலும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. இந்த வரிசையில் பள்ளிக்கூட முதல்வர் மாணவிகளை பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதையும் படியுங்கள்: அதிர்ச்சி!! திருடிய பைக்கை திருப்பி கேட்டதால் ஆத்திரம்.. அடித்துக் கொலை செய்து கிணற்றில் தூக்கிய வீசிய சம்பவம்
விவரம் பின்வருமாறு குஜராத் மாநிலத்தில் சூரத்தில் உள்ள அரசுப் பள்ளி முதல்வர் மாணவிகளிடம் செய்துவந்த காம நிலை தாமதமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது, சூரத் முனிசிபல் பள்ளிக்கூடத்தை சேர்ந்த முதல்வர் கடந்த சில மாதங்களாக பள்ளி மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களது வேதனையை வெளிப்படுத்த முடியாமல் மனதிற்குள் புழுங்கி வந்துள்ளனர், இந்நிலையில் திடீரென அந்த பள்ளி முதல்வர் வேறு இடத்திற்கு இடமாறுதல் செய்யப்பட்டார், இந்நிலையில் அந்த நபர் செய்த சேட்டைகள் குறித்து மாணவிகள் தைரியமாக வெளியில் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.
அவர் இந்தப் பள்ளியில் முதல்வராக இருந்தபோது அவரால் தாங்கள் சந்தித்த கொடுமைகளை மாணவிகள் பள்ளிக்கூட ஊழியர்களிடம் கூறியுள்ளனர், இந்நிலையில் ஊழியர்கள் கொடுத்த புகாரின் பேரில் அந்த ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் பல மாணவிகள் பள்ளி முதல்வர் தனியாக கேபினுக்கு அழைத்துச் சென்று அந்தரங்க உறுப்புகளை தொடுவது வழக்கம் என்றும், பலமுறை தங்களை மிரட்டி பாலியல் வக்கிர செயல்களில் ஈடுபட்டதாகவும் மாணவிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து குறிப்பிட்ட குற்றம்சாட்டப்பட்ட முதல்வரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.