அட கொடுமையே... இளம்பெண்ணிடம் நிர்வாணமாக வீடியோ கால் பேசிய இளைஞன்... கதி என்ன ஆச்சு பாருங்க..

Published : Jul 12, 2022, 09:09 PM ISTUpdated : Jul 12, 2022, 09:14 PM IST
அட கொடுமையே... இளம்பெண்ணிடம்  நிர்வாணமாக வீடியோ கால் பேசிய இளைஞன்... கதி என்ன ஆச்சு பாருங்க..

சுருக்கம்

இளம்பெண்ணிடம்  நிர்வாணமாக வீடியோ கால் பேசிய இளைஞர் அந்தப் பெண்ணிடம் ஏராளமான பணத்தை இழந்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்நிலையில் அந்த இளைஞர் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

இளம்பெண்ணிடம்  நிர்வாணமாக வீடியோ கால் பேசிய இளைஞர் அந்தப் பெண்ணிடம் ஏராளமான பணத்தை இழந்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்நிலையில் அந்த இளைஞர் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இந்தச் சம்பவம்  கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடந்துள்ளது.

தொழில்நுட்பம் ஒருபுறம் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில்  மறுபுறம் அதை சமூக விரோதிகள் குற்றச் செயலுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.  அதை பயன்படுத்தி பணம் பறிப்பது, பிறரில் புகைப்படத்தை தவறாக சித்தரித்து மிரட்டி பணம் பறிப்பது போன்ற மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வரிசையில் இளைஞர் ஒருவரை வாட்ஸ்அப் வீடியோ காலில் பேசவைத்து பெண் ஒருவர் அவரிடம் லட்சக்கணக்கில் பணத்தை கறந்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு பனசங்கரி, உதய் நகரைச் சேர்ந்த ஒரு இளைஞர் வாட்ஸப் கால் மூலம் ஒரு இளம்பெண்ணுடன் சகஜமாக பேசி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்தப் பெண் அந்த இளைஞரை  நிர்வாணமாக வீடியோ காலில் பேசும்படி கேட்டுள்ளார், அந்தப் பெண்ணின் மீது அந்த இளைஞருக்கு ஈடுபாடு அதிகமானதால் நிர்வாண நிலையில் வீடியோ காலில் பேசியதாக தெரிகிறது. அந்தப் பெண் அதை பதிவு செய்துவைத்துக் கொண்டு, அந்த இளைஞரை மிரட்டத் தொடங்கினார்.

தனக்கு எப்போதெல்லாம் பணம் தேவையோ அப்போதெல்லாம் இளைஞரை மிரட்டி வசூலித்து வந்துள்ளார். பணம் தரவில்லை என்றால் பலான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என அந்தப் பெண் மிரட்டி வந்துள்ளார். அதற்கு அஞ்சிய அந்த இளைஞர் அந்தப் பெண் கேட்கும் போதெல்லாம் அவருக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பணம் கொடுக்காத நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். இதையடுத்து சில  மர்ம நபர்கள் அந்த  இளைஞருக்கு போன் செய்து, நீ வீடியோ காலில் பேசி வந்த இளம் பெண் இறந்து விட்டார், அந்தப்பெண்ணின் மரணத்திற்கு நீதான் காரணம், எனவே உன்மீது புகார் கொடுத்துள்ளோம், மேலும் அதுதொடர்பாக உங்கள் மீது  சிபிஐயில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என மிரட்டத் தொடங்கினர். 

மேலும் சிபிஐயில் அந்த இளைஞரின் பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது போல போலீயாக ஒரு ஆவணத்தையும் தயார் செய்து அதை அந்த இளைஞருக்கு அனுப்பி மிரட்டினர். அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞர் அவர்களிடம் என்ன தயவு செய்து விட்டு விடுங்கள் என கதறியுள்ளார். இதை பயன்படுத்திக் கொண்ட அந்த கும்பல், இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் 5 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என மிரட்டியுள்ளது. அதற்கு ஒப்புக் கொண்ட அந்த இளைசர் சிறுக சிறுக 5 லட்சம் ரூபாயை அவர்களுக்கு அனுப்பியதாக தெரிகிறது. 

ஒரு கட்டத்தில்  அந்த கும்பலால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த இளைஞன் உச்சக்கட்ட விரக்தியில் தன்னை நிர்வாணமாக வீடியோ கால் பேச வைத்து மோசடி செய்த பெண் மீதும், அதற்குப் பின்னர் தன்னிடம் ஐந்து லட்ச ரூபாய் கறந்த மர்ம கும்பல் மீதும் பெங்களூரு தென் கிழக்குப் பிரிவு சைபர்கிரைம் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இளம் பெண்ணையும், மோசடி கும்பலையும் தேடி வருகின்றனர். 
 

PREV
click me!

Recommended Stories

முதலிரவில் அதிர்ச்சி.. திருமணமான 3 நாளில் விவாகரத்து கேட்ட புதுப்பெண்! நடந்தது என்ன?
ஆண்ட்டியின் அழகில் மயங்கிய கொரியர் ஊழியர்.. ரவுடியின் மனைவிக்கு விடாமல் காதல் மெசேஜ்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி