கல்லூரி மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம்... பிரபல தமிழ் நடிகரின் மகன் அட்டூழியம்..!

Published : Mar 04, 2020, 04:48 PM IST
கல்லூரி மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம்... பிரபல தமிழ் நடிகரின் மகன் அட்டூழியம்..!

சுருக்கம்

பிரபல நடிகரின் மகன் கல்லூரி மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததால் கைது செய்யப்பட்டுள்ளார்.   

பிரபல நடிகரின் மகன் கல்லூரி மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததால் கைது செய்யப்பட்டுள்ளார். 

தூரல் நின்னு போச்சு, வசந்த காலம் உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் குணச்சித்திர நடிகராகவும், வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தவர் நடிகர் சூர்ய பிரகாஷ். தற்போது அதிமுகவில் நட்சத்திர பேச்சாளராக இருக்கிறார். இவரது மகன் விஜய் ஹரிஷ். 25 வயதான இவர் ‘நாங்களும் நல்லவங்கதான்’ படத்தில் நடித்து வருகிறார்.

விஜய் ஹரிஷ் வண்ணாரப்பேட்டேயைச் சேர்ந்த பி.காம் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவியுடன் நட்பாக பழகி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் விருகம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டுக்கு மாணவியை அழைத்து வந்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மயக்கத்தில் உடலுறவு கொண்டு அதை வீடியோ எடுத்து வைத்து அதன் பின்பு பேஸ்புக்கில் போடுவதாக மிரட்டி பல முறை சீரழைத்துள்ளார். மீண்டும் தான் உறவுக்கு அழைக்கும் போதெல்லாம் வரவேண்டும் என்றும் இல்லையென்றால் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு விடுவதாகவும் மாணவியை மிரட்டியுள்ளார். இந்நிலையில் கல்லூரி மாணவி நேற்று முன்தினம் கொடுத்த புகாரின் பேரில் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நடிகர் விஜய் ஹரிஷை கைது செய்து 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி