கையைப்பிடித்து இழுத்து... செல்ஃபி எடுத்து... இளைஞரின் நாடகக் காதலால் கல்லூரி மாணவி எடுத்த பகீர் முடிவு..!

Published : Mar 02, 2020, 11:53 AM IST
கையைப்பிடித்து இழுத்து... செல்ஃபி எடுத்து... இளைஞரின் நாடகக் காதலால் கல்லூரி மாணவி எடுத்த பகீர் முடிவு..!

சுருக்கம்

ஒருதலை காதல் விவகாரத்தில் ‘செல்பி’எடுத்து மிரட்டிய வாலிபரால் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.   

ஒருதலை காதல் விவகாரத்தில் ‘செல்பி’எடுத்து மிரட்டிய வாலிபரால் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அண்ணாநகரைச் சேர்ந்தவர் சரவணன். இவரது அக்கா மகள் 22 வயதான மோனிஷா. இவர், நெம்மேலி அரசு கலைக்கல்லூரில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். மோனிஷாவின் தாய்-தந்தை இருவரும் இறந்து விட்டதால் தனது தாய் மாமா சரவணன் வீட்டில் அவர் வசித்து வந்தார்.

அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர், மோனிஷாவை ஒரு தலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது. மோனிஷா தினமும் கல்லூரிக்கு செல்லும்போது அந்த வாலிபர், தன்னை காதலிக்க வற்புறுத்தி தொல்லை கொடுத்தார். இதை மாணவி ஏற்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், மோனிஷாவை வழிமறித்து கையை பிடித்து இழுத்து ஒன்றாக இருப்பதுபோல் தனது செல்போனில் ‘செல்பி’எடுத்துக்கொண்டார். அதன்பிறகு தன்னை காதலிக்காவிட்டால் அந்த புகைப்படத்தை முகநூலில் வெளியிட்டு விடுவதாக மோனிஷாவை மிரட்டினார்.

இதனால் மனம் உடைந்த மோனிஷா, நேற்று இரவு வாலிபரின் ஒரு தலைக்காதல் தொல்லைகள் குறித்து கடிதம் எழுதி வைத்துவிட்டு தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்தார். இதுபற்றி மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

PREV
click me!

Recommended Stories

காரில் திமுக கொடியுடன்.. ஃபுல் மப்பில் போயி யாரையாவது சாக அடிக்கவா? இப்படி பேசிட்டு கேஸ் போடாத போலீஸ்
இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!