சிறுவன், மாணவி மீது பாய்ந்து வாயை பொத்தி, அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த மாணவி அலறி கூச்சலிட்டுள்ளார். இந்த சத்தம் கேட்டு எழுந்த பெற்றோர் அந்த சிறுவனை பிடிக்க முயன்றார். அப்போது யாரிடமமு் சிக்காமல் அவன் அங்கிருந்து தப்பி ஓடினான்.
திருட புகுந்த அரசு ஊழியரின் வீட்டில் நகை, பணம் ஏதும் இல்லாததால் கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடலூர் வண்ணாரப்பாளையத்தை சேர்ந்தவர் 47 வயதான அரசு ஊழியர். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர் நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினருடன் சாப்பிட்டு விட்டு வீட்டின் பின்பக்க கதவை மூடாமல் வராண்டாவில் படுத்து தூங்கினார். மேலும் அவரது மூத்த மகள் வீட்டில் உள்ள ஒரு அறையிலும், இளைய மகளான 19 வயதுடைய கல்லூரி மாணவி வராண்டாவிலும் தூங்கி கொண்டிருந்தனர்.
இதையும் படிங்க;- ஆசையாக நெருங்கும் போதெல்லாம் ஃபுல் மப்பில் தூங்கிய கணவர்.. ஏக்கத்தில் இருந்த மனைவி செய்த பகீர் சம்பவம்..!
இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் அரசு ஊழியர் வீட்டின் பின்பக்க கதவை திறந்து உள்ளே புகுந்த சுமார் 15 வயது மதிக்கத்தக்க சிறுவன், நகைகள் மற்றும் பணம் ஏதும் இருக்கிறதா? என வீடு முழுவதும் தேடியுள்ளார். பணம், நகைகள் ஏதும் இல்லாததால், அந்த சிறுவன் வீட்டில் இருந்து வெளியே செல்ல முயன்றுள்ளார். அப்போது, வராண்டாவில் தூங்கிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியின் ஆடைகள் விலகி இருந்ததை பார்த்ததும் சிறுவனுக்கு பார்வை அந்த இளம்பெண் மீது திரும்பியது.
உடனே அந்த சிறுவன், மாணவி மீது பாய்ந்து வாயை பொத்தி, அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த மாணவி அலறி கூச்சலிட்டுள்ளார். இந்த சத்தம் கேட்டு எழுந்த பெற்றோர் அந்த சிறுவனை பிடிக்க முயன்றார். அப்போது யாரிடமமு் சிக்காமல் அவன் அங்கிருந்து தப்பி ஓடினான். மேலும் அவனுடன் வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்த மேலும் 2 சிறுவர்களும் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பித்தனர்.
இதையும் படிங்க;- ஒர்க் ஷாப் வேலைக்கு வந்த 22 வயது இளைஞரை மடக்கிய ஓனரின் மனைவி.. தடையாக இருந்த புருஷனை போட்டு தள்ளிய கொடூரம்.!
இதனால் அந்த சிறுவன் தனது நண்பர்கள் 2 பேருடன் அரசு ஊழியர் வீட்டில் திருட வந்ததும், வீட்டில் நகைகள் ஏதும் இல்லாததால் கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதுகுறித்து அரசு ஊழியர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவன் ஒருவனை கைது செய்துள்ள நிலையில் தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.