மாணவியை மிரட்டி பிளாக்மெயில் செய்ததால் தற்கொலை.. தருதல பிள்ளைக்கு உடந்தையாக இருந்த கொடூர தாயும் கைது..!

Published : Jun 24, 2021, 07:25 PM IST
மாணவியை மிரட்டி பிளாக்மெயில் செய்ததால் தற்கொலை.. தருதல பிள்ளைக்கு உடந்தையாக இருந்த கொடூர தாயும் கைது..!

சுருக்கம்

கோவை சிங்காநல்லூரில் கல்லூரி மாணவி தற்கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவரின் செல்போனில் இருந்து ஏராளமான வீடியோ காட்சிகளை போலீசார் பறிமுதல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சிங்காநல்லூரில் கல்லூரி மாணவி தற்கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவரின் செல்போனில் இருந்து ஏராளமான வீடியோ காட்சிகளை போலீசார் பறிமுதல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை உப்பிலிபாளையம் ராஜிவ்காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி  கடந்த 13ம் தேதி விஷம்  குடித்து தற்கொலை  செய்து கொண்டார். இது தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் மாணவியின் வீட்டின் அருகில் தங்கி படித்து வந்த கேசவ்குமார் என்ற மானாமதுரையை சேர்ந்த மாணவர், கல்லூரி மாணவியை அடிக்கடி மிரட்டி பணம் பறித்ததும், புகைப்படத்தை மார்பிங் செய்து இணையத்தில் வெளியிட்டு விடுவதாக கூறி மிரட்டியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு தெரியவந்தது.

இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் கேசவ குமாரையும் அவரது தாயாரையும் கைது செய்தனர். பணம் பறிக்கும் கேசவ குமாரின் நடவடிக்கைகள் தெரிந்தும், அவற்றுக்கு உடந்தையாக இருந்ததால் மங்கையர்கரசியையும்  சிங்காநல்லூர் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட கேசவ குமாரின் செல்போனில் இருந்த வீடியோக்களை பார்த்த சிங்காநல்லூர் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

அடச்சீ.. இப்படி ஒரு தாயா? 31 வயது கள்ளக்காதலனுக்கு 18 வயது மகளை திருமணம் செய்து வைத்த கொடூரம்
பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி.. காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. கணவன் கண்முன்னே அலறிய மனைவி..